தமிழக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து!!
தமிழகத்தில் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு கலந்தாய்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர்கள் பணிமூப்பின் அடிப்படையில் பணி மாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் இளம் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர் அறிவிப்பு!!
எனவே பிப்ரவரி மாதம் 27, 28 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்பு தான் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்பின் இந்த வழக்கு குறித்த விரசனையை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்