தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தேர்வு தேதி அறிவிக்கும் வரை இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 5 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட இருந்தது.
TN Job “FB
Group” Join Now
ஆனால் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை நடைபெற்று வந்தது.
ஞாயிறு ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இந்நிலையில் மாணவர்களுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் தேர்வுக்கு மட்டும் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அதுவரை மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மாநில அரசுகள் அறிவிப்பு!!
இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், “மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு பின்னர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பொன்னான நாட்களை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராக வேண்டும். மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் “, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.