தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை – தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பின்பு 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவர் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் போன்றவற்றிற்காக ஆசிரியர்கள் மீண்டும் கடந்த ஜூன் மாதம் முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று பணிகளை செய்து வந்தனர்.
Petrol & Diesel Rate in Chennai – இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
பின்பு தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்பரவல் குறைந்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்கல்வி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு வர தொடங்கினர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது.
TN Job “FB
Group” Join Now
மேலும் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தால் பல பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன் காரணமாக தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் நேற்று (ஏப்ரல் 23) பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான செய்முறை தேர்வுகளும் முடிந்து விட்டது. தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை புரிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி – மாநில அரசுகள் அறிவிப்பு!!
இதன் காரணமாக தற்போது தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நேர கூட்டங்கள், பிரச்சாரங்கள் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது அமைதியாக இருந்த அதிகாரிகள் தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் கொரோனா பரவும் பொழுது அமைதியாக இருந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.