பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் – தமிழக அரசு அறிவிப்பு !!

0
பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் - தமிழக அரசு அறிவிப்பு !!
பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் - தமிழக அரசு அறிவிப்பு !!
பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் – தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பெற இன்று கடைசி தேதி ஆகும்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பரிசில் ரூ.2500 ரொக்கமும், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த பொருள்களை வாங்க ஜனவரி 13-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!

இந்நிலையில் புதிய குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் பொங்கல் பரிசு பெற முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு சார்பில் ஜனவரி 25 வரை பொங்கல் பரிசு பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு இன்று வரை மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் ‘நீட்’ பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!

இதன்படி பொங்கல் பரிசு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இன்று அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here