தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

2
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடருமா? என பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. எனவே பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றதால், பள்ளிகள் பின்னர் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டன. அன்று தொடர்ந்து 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. பின்னர் பல்வேறு மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பள்ளி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் – அரசு அதிரடி உத்தரவு!!

இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதனால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து உள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வகுப்பறை, பள்ளி நண்பர்கள், ஆசிரியர்களை நேரில் பார்க்க இயலாத காரணத்தால் மாணவர்கள் உற்சாகமின்றி காணப்படுகின்றனர். தற்போது கொரோனா பரவலின் 2வது அலை பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு மீண்டும் விடுமுறை அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் தொடருமா? அல்லது நேரடி வகுப்புகள் நடத்தப்படுமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – அதிகாரிகள் விளக்கம்!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டில் அரசு ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்தால் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்படும். அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறையும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Lock down venam nangalam padikkanum…. I am nursing student pls venam, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😽

  2. GO GO CORANA ,DONT COME AGAIN ,WHEN U COME WE LOSE OUR EDUCATION, WE LOSE OUR FRIENDSHIP, AND TEACHERS RELATION ,THIS IS GOOD FOR EVERY ONE ,THEREFORE GO GO CORANA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!