தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்து சாதனை…!! தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்

0
தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்து சாதனை...!! தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்
தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்து சாதனை...!! தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்

தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் முதலிடத்தை பிடித்து சாதனை…!! தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்

 

தமிழ்நாடு அரசு குறிப்பாக,  தொழில்துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதால், கணிசமான முன்னேற்றங்களுடன் தொழில்களும் பெருகி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “மின்னணு துறையில், 2024 -2025 ஆம் நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரை, தமிழ்நாடு, தேசிய ஏற்றுமதியில் 37% த்தை தாண்டி பெரும் சாதனை  படைத்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

உங்க தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளீர்களா..?? மத்திய அரசு அறிவித்த திடீர் விதி மாற்றம்.. இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

இதையடுத்து, “இரண்டாவது இடத்தில் 20 சதவீதத்துடன் கர்நாடகாவும், 10 வது இடத்தில் ஆந்திராவும் உள்ளதாக” தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், “கடந்த 2021 ஆம் ஆண்டில் 1.87 பில்லியன் US டாலர் ஆக இருந்த மின்னணு ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, தற்போது 12.5 பில்லியன் US டாலர் ஆக உயர்ந்துள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் மற்ற நாடுகளுடன் போட்டிபோட்டு கொண்டு முதலீடுகளை ஈர்க்கிறோம் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் அசந்து போகும் அளவில் தமிழ்நாடு முன்னேறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!