தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு மகளிர் உயர்நிலை பள்ளிகளில் 912 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் 01.01.2023 முதல் 31.12.2027 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியாகி இருக்கிறது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2008-2009, 2009-2010 மற்றும் 2010-2011ம் கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலை பள்ளிகளை பிரித்து தனியாக அரசு மகளிர் உயர்நிலை பள்ளிகள் தொடங்கப்பட்டது. இந்த பள்ளிகளில் மொத்தம் 1512 பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட்டன .

Follow our Instagram for more Latest Updates

இந்த பணியிடங்களில் 912 பணியிடங்களுக்கு மட்டும் அதாவது 330 பட்டதாரி ஆசிரியர், 575 முதுகலை ஆசிரியர் மற்றும் 7 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் 01.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டது.

அக்.31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து 912 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட தற்காலிக நீட்டிப்பு 31.12.2022 வரை முடிவடைகிறது. அது மேலும் 01.01.2023 முதல் 31.12.2027 வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!