மாணவர்களே அக்கவுண்டை ரெடியா வச்சுக்கோங்க…!! தமிழக அரசு அள்ளிக்கொடுக்கப்போகும் உதவித்தொகை…!!
கல்வி என்பதே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாகும். இதனை கருத்தில் கொண்டே, நாட்டின் வருங்கால தூண்களான தற்போதைய மாணவர்களின் கல்வியில் இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதார தொழில் புரிவோர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை எவ்வித வரம்பும் இன்றி ஆண்டுத்தோறும் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியானவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க மே 30 ஆம் தேதியே இறுதிநாளாகும். மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் UMIS- இன் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திலும், அல்லது தங்கள் பயிலும் கல்லூரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























