தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு – தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!!

0
தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு - தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!!
தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு - தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!!
தேசிய அளவில் பள்ளிக்கல்வி செயல்திறன் குறியீடு – தமிழகம் ஏ++ மதிப்பீடு பெற்று சாதனை!!

நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு மாநிலங்களை மதிப்பீடு செய்யும். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.

மிக உயரிய மதிப்பீடு:

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 70 பிரிவுகளின் கீழ் அளவீடு செய்வதற்கு செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 2019-20 ஆம் ஆண்டுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடுகளை வெளியிட மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அனுமதி அளித்துள்ளார்.

தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று முதல் அமல்!!

முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. இந்த குறியீடு மூலமாக பல மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கல்வித்துறையில் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்நிலையில் 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ஐ‌ பெற்றுள்ளன.

SBI வங்கியில் ஜூலை 1 முதல் சேவை கட்டணம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

ஆனால் கடந்த ஆண்டை கணக்கீடு செய்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தங்களது ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் கூடுதலாக 10%, அதாவது 100 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளன.

குறியீடு மதிப்பெண் குறித்த விவரங்கள்:

அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் பஞ்சாப் ஆகியவை அணுகுதல் என்ற பிரிவில் 10% (8 புள்ளிகள்) வளர்ச்சியைப் பெற்றுள்ளன. 13 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பிரிவில் 10% (15 புள்ளிகள்) வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் ஒடிசா, 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

TN Job “FB  Group” Join Now

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சம விகிதம் என்ற பிரிவில் 10%க்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளன. 19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஆளுகை செயல்முறை என்ற பிரிவில் 10% வளர்ச்சியை (36 புள்ளிகள்) எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!