தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் – அரசிடம் கோரிக்கை!

0
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் – அரசிடம் கோரிக்கை!

சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அதற்கு அவகாசம் அளிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மின் கட்டணம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையை நேற்று முன்தினம் (டிச. 4) மிக்ஜாம் புயல் தாக்கியது. அதன் எதிரொலியாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் இன்னும் பல இடங்களில் மின்சார விநியோகம் வரவில்லை. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

ஹாப்பி நியூஸ்! டிச.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!!

அதன் பின் அபராதம் செலுத்தி மின் கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில் புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. அதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இந்த மாதம் 4 ஆம் தேதி மின் கட்டணம் செலுத்த கடைசி நாளாக இருப்பதால், மின்கட்டணம் செலுத்த மேலும் அவகாசம் அளிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join No

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!