தமிழக சட்டமன்ற தேர்தல் பணி – மின்வாரிய ஊழியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு!!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி - மின்வாரிய ஊழியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி - மின்வாரிய ஊழியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு!!தமிழக சட்டமன்ற தேர்தல் பணி - மின்வாரிய ஊழியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் பணி – மின்வாரிய ஊழியர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு!!

தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணியாளர்கள் பட்டியல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்குசாவடிகளில் பணிபுரிய விருப்பமுள்ள பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணியில் மின்சார வாரியம் தீவிரம் காட்டியுள்ளது. இது குறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது, “2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கான விருப்பமுள்ள பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்” என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரியுமான ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பின்படி, விரைவில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களில் வாக்குச்சாவடிகளில் பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக ஊர் காவல் படையினருக்கு வேலை நாட்கள் அதிகரிப்பு – காவல் துறையுடன் இணைக்க கோரிக்கை!!

இது குறித்து 2 மாதங்களுக்கு முன்னரே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமையகம், மண்டல தலைமை பொறியாளர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் பட்டியல் தயார் செய்யும் போது கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் தவிர்த்து தயாரிக்க வேண்டும் என மின்வாரிய செயலாளர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!