தமிழக ஊர் காவல் படையினருக்கு வேலை நாட்கள் அதிகரிப்பு – காவல் துறையுடன் இணைக்க கோரிக்கை!!

7
தமிழக ஊர் காவல் படையினருக்கு வேலை நாட்கள் அதிகரிப்பு - காவல் துறையுடன் இணைக்க கோரிக்கை!!
தமிழக ஊர் காவல் படையினருக்கு வேலை நாட்கள் அதிகரிப்பு - காவல் துறையுடன் இணைக்க கோரிக்கை!!
தமிழக ஊர் காவல் படையினருக்கு வேலை நாட்கள் அதிகரிப்பு – காவல் துறையுடன் இணைக்க கோரிக்கை!!

தமிழக அரசு சார்பில் பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினருக்கான சம்பளம், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக குறைவாக உள்ளதாகவும், வேலை நாட்களை அதிகரிக்க வேண்டியும் ஊர்க்காவல் படையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊர்க்காவல் படையினர் கோரிக்கை:

தமிழகம் முழுவதும் 16,620 பேர் ஊர்க்காவல் படையில் உள்ளனர். இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களில் பாதுகாப்பு பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்களை ஓட்டும் பணி போன்றவற்றை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 300 பேரும் மற்ற மாவட்டங்களில் அந்த மாவட்டங்களுக்கு ஏற்ப 200 முதல் 300 பேர் பணியாற்றி வருகின்றன. முன்னதாக இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 என மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு முடிவில் அவர்களுக்கு ரூ.560 தினமும் வழங்கப்பட உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிகளில் “ஆபரேஷன் இ” திட்டம் – கல்வியாளர்கள் கோரிக்கை!!

ஆனால் அவர்களின் பணிக்காலம் மாதம் 5 நாட்கள் என நிர்ணயித்து உத்தரவிட்டது. மற்ற மாநிலங்களில் ஊர்காவல் படையினர் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அவர்கள் குறைவான ஊதியத்திற்கு மாதம் முழுவதும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – ஆசிரியர்கள் எதிர்ப்பு!!

எனவே ஊர்காவல் படையினரை தமிழக காவல்துறையில் ஒரு அங்கமாக அறிவித்து அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். மேலும் அவர்களின் பணி காலம் பொறுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!