பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – ஆசிரியர்கள் எதிர்ப்பு!!

0
பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்ப்பு!!
பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - ஆசிரியர்கள் எதிர்ப்பு!!
பிப்ரவரி 27 முதல் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு – ஆசிரியர்கள் எதிர்ப்பு!!

தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி 27, 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

தலைமை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு:

தமிழகத்தில் தொடக்க பள்ளிக்கல்வித்துறையில் கீழ் பணிபுரிந்து வரும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு மே முதல் ஜூலை வரை பணியிட மாறுதல், பணி நிரந்தரம் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 27,28 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அவர்களில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பி.இ.ஓ., பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு 28ம் தேதி நடக்க உள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் 2,331 பணியிடங்கள் – உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!

இந்நிலையில் கடந்த ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத காரணத்தால் தற்போது நடத்தப்பட உள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அனைத்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில செயலாளர் முனியசாமி மற்றும் மாவட்ட தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணி மாறுதல் அறிவிக்காமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

13,625 கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜிபி டேட்டா கார்டுகள் – அமைச்சர் பேட்டி!!

எனவே சார்நிலைக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த கலந்தாய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் ஆசிரியர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் எனவே அரசு சார்பில் பணிமாறுதல் வழங்கிவிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!