தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை ஆலோசனை!!

0
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல் - சுகாதாரத்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல் - சுகாதாரத்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை ஆலோசனை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தினசரி கொரோனா தொற்று பரவல் 2 நாட்களாக 2000-யை கடந்து வருவதால் தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுபாடுகள்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இரண்டு நாட்களாக கொரோனா தாக்கம் 2000யை கடந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இம்முறை ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்கள் இல்லாமல் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று 2000 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தேர்தல் காரணமாக பிரச்சாரம் நடைபெற்று வருவதால் தற்போது கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது கடினம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!!

எனவே தேர்தலுக்கு பின்னர் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விதித்த 4 ஆம் கட்ட மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தளர்வுகளில் வழிபாடு தளங்களை மூடுதல், மத நிகழ்ச்சிகள், அரசியல், சமூக நிகழ்வுகள், போன்றவை நடத்த தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!