தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் கடிதம்…!! தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வலியுறுத்தல்..!!

0
தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் கடிதம்...!! தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் கடிதம்...!! தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வலியுறுத்தல்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்க முதல்வர் கடிதம்…!! தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வலியுறுத்தல்..!!

மத்திய அரசு வலியுறுத்தி வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதையடுத்து, “கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநில தலைவர்கள் ஒன்றுகூடி, சென்னையில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது”.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் இன்று (02-04-2025) பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாட்டின் கவலைகளை விளக்கி, பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்க நேரம்” கேட்டுள்ளார். மேலும், “இந்த சந்திப்பில் சமீபத்தில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனுவாக வழங்கவும்” முடிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!