
மீனவர்களுக்கான மாத நிதி உதவி தொகையை உயர்த்த உத்தரவு…!! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மீனவ சங்கங்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை பற்றி அறிந்து கொண்டு இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் நேரடியாக சென்று மீனவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீன் இறங்கு தளத்தை மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துக்கல் மீன் இறங்கு தளத்தை துண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் போன்றவற்றிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடியாக பணிகளை மேற்கொள்ள” தமிழக முதல்வர் ஆணையிட்டார். இதனை தொடர்ந்து, “இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள்தோறும் ரூ.350 வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை உயர்த்தி ரூ.500 நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்”.























