அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!!

0
அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!!
அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!!
அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!!

சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் குடிமைப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருவதாக தேர்வு பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

குடிமைப்பணி தேர்வு பயிற்சி:

சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் (அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்) சார்பில் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கான பயிற்சி இணைய வழி வகுப்புகள், யூடியூப் சேனல் வழியாக நடைபெறுகின்றன. இதுகுறித்து அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத் தலைவர் இறையன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “54 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் குடிமை பணிகளில் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதனை சரி செய்யும் நோக்கில், தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என தெரிவித்தார்.

தமிழக அரசு மாணவர் விடுதிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு & சிசிடிவி கேமராக்கள்!!

மேலும், இந்த வகுப்புகள் இணைய வழியாகவும், யுடியூப் சேனல் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. தினமும் காலை, 10:15 முதல், 11:30 மணி; 11:45 முதல், 1:00 மணி; பகல், 2:00 முதல், பிற்பகல், 3:15 மணி; மாலை, 3:30 முதல், 4:45 வரை, நான்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் முதல்நிலை பாடத்திட்டம் அடிப்படையில் இந்திய வரலாறு, தேசிய விடுதலை போராட்டம், புவியியல், அரசியல், பொருளாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல், நடப்பு நிகழ்வுகள் போன்ற தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றனர்.

10,12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை – மாநில கல்வித்துறை வெளியீடு!!

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள், இணையவழி வகுப்புக்கள் அல்லது AICSCC TN என்ற யூடியூப் சேனல் மூலமாக பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி வகுப்பு மூலமாக பணிக்கு செல்வோர் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் பயனடைவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!