அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பெண்களின் முன்னேற்ற்றத்திற்காக பாடுபடும் பெண்களுக்கு மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவ்வையார் விருது வழங்குவார். இந்த ஆண்டுக்கான விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அவ்வையார் விருது 2021:

பெண்களில் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரியும் பெண் ஒருவருக்கு ஆண்டுதோறும் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அவ்வையார் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதினை பெற பின்வரும் தகுதிகள் தேவை அவை, அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக பாடுபடுபவராக இருக்க வேண்டும்.

ஜனவரி 18 முதல் கோவையில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். இந்த தகுதிகளை உடைய பெண்கள் தங்களை பற்றிய விவரங்கள், சேவை செய்ததற்கான ஆதாரங்களை 2 நகல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உடன் இணைத்து வருகிற 8-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

மருத்துவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு – 47 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்!!

காஞ்சிபுரம் மாவட்ட சமூகநல ஆணையத்தின் விவரம் பின்வருமாறு,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
எண் 43,2-வது தெரு, காந்தி நகர்,
செவிலிமேடு,
காஞ்சிபுரம்-631501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!