தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!!

0
தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப கோரிக்கை!!
தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப கோரிக்கை!!
தமிழக வேளாண் துறையில் 1200 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!!

தமிழக வேளாண் துறையில் காலியாக உள்ள 1200 வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே வேளாண் அலுவலராக பணியாற்றி உதவி இயக்குனராக பதிவு உயர்வு பெற்றவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேளாண் அலுவலர் பணியிடங்கள்:

தமிழக வேளாண் துறையில் ஏற்கனவே வேளாண் அலுவலர்களாக பணியாற்றியவர்கள், 135 பேருக்கு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் தற்போது அந்த துறையில் 1200 வேளாண் அலுவலர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என ஏற்கனவே பணியில் இருந்து பதவி உயர்வு பெற்ற உதவி இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியதாவது, “வேளாண் துறையில் 1200 வேளாண் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வரை 135 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை போல மீண்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

தற்போது அரசு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், வழக்கமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆனால் அதற்கு கால அவகாசம் அதிகமாக எடுக்கும் என்பதால், தேர்தல் ஆணையம் நேரடி பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here