தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு!

0
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு!
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு!
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு!

சென்னையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரதராஜபுரம், கோலப்பன் சேரி, பாலவேடு சின்ன முல்லை வாயில் ஆகிய சுங்க சாவடியில் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுங்க கட்டணம் உயர்வு :

இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 400க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், பெரும்பாலான சுங்கச்சாவடிகள் 1992ல் அமைக்கப்பட்டவை. மேலும் 2008ல் சில சுங்கச்சாவடிகள் உருவாக்கப்பட்டன. மேலும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் படி, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளி வட்டச் சாலையில் இயங்கி வரும் 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

IBPS அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு – 6000+ காலிப்பணியிடங்கள்! முழு விவரம் இதோ!

இதன் வகையில் வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்னமுல்லைவாயல் ஆகிய 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 3 சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை என தினசரி கட்டணத்தில் சராசரியாக ரூ. 5 லிருந்து ரூ.22 வரை உயர்த்தியுள்ளது. அதேபோல் மாதாந்திர கட்டணத்தில் ரூ. 194 லிருந்து ரூ. 1,250 வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வானது வரும் ஜூலை 5 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், 31.03.2023 வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் இந்த ஆண்டு இது இரண்டாவது முறையாக அதாவது, வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் 60 கிமீ நீளமான, வரதராஜபுரம், கொலப்பஞ்செரி, நெம்மேலிச்சேரி மற்றும் சின்னமுல்லைவாயல் ஆகிய இடங்களுக்கு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2023ம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் சுங்க கட்டணம் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேசமயம், இதில், கட்டணம் 5% – 10% உயர்த்தவோ அல்லது சிலவற்றுக்கு மட்டும் குறைக்கப்படவோ வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!