
TNJFU தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – சம்பளம் ₹20,000 | விண்ணப்பிக்க கடைசி தேதி 07-11-2025
தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University – TNJFU) சார்பில் Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் கொண்டவர்கள் ஆஃப்லைன் (Offline) முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 07-11-2025 அன்று மாலை 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு சிறந்த கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
பணியிட விவரம்
| பதவி பெயர் | பணியிடங்கள் (No. of Posts) |
|---|---|
| Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) | 01 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்:
-
M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology)
அல்லது -
M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology / Life Sciences)
வயது வரம்பு
-
வயது வரம்பு பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
விண்வெளித் துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு இஸ்ரோ தலைவர் பெருமிதம்
சம்பளம்
-
மாத சம்பளம்: ₹20,000/-
விண்ணப்பக் கட்டணம்
-
எந்தவொரு விண்ணப்பக் கட்டணமும் இல்லை
தேர்வு நடைமுறை
-
தகுதியான மற்றும் குறுகிய பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் (Email) மூலம் நேர்காணல் அழைப்பு அனுப்பப்படும்.
-
நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டும் பணியிடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
-
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்த்து சான்றிதழ்களின் நகல்களை tanii202526@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
-
விண்ணப்பங்கள் 07-11-2025 மாலை 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
-
நேரம் கடந்தவுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.























