தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவன பயிற்சி முகாம் – யாருக்கு உதவும்?? முழு விவரம் இதோ!

0
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவன பயிற்சி முகாம் - யாருக்கு உதவும்?? முழு விவரம் இதோ!
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு & புத்தாக்க நிறுவன பயிற்சி முகாம் – யாருக்கு உதவும்?? முழு விவரம் இதோ!

தமிழக அரசு சார்பில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வழங்கும் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த 3 நாட்கள் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பயிற்சி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், வழங்கும் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி 3 நாட்கள் பயிற்சி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த 3 நாள் பயிற்சியானது மார்ச் 29ம் தேதி முதல் தொடங்கி 31ம் தேதி வரை காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – மார்ச் 28ம் தேதி மாபெரும் பேரணி!

இதில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்ற விவரங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். மேலும் இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலகங்களில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த பயிற்சியில் சேர தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் 9677152265,044-22252081, 22252082. 9444556099 என்பதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் முகவரியான தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032 என்பதை தொடர்பு கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!