தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் திடீர் ராஜினாமா – பாலியல் வீடியோ எதிரொலி!

0
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் திடீர் ராஜினாமா - பாலியல் வீடியோ எதிரொலி!
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் திடீர் ராஜினாமா - பாலியல் வீடியோ எதிரொலி!
தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் திடீர் ராஜினாமா – பாலியல் வீடியோ எதிரொலி!

தமிழகத்தில் பாஜக கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் கே.டி ராகவன் குறித்து சமூக வலைதளங்களில் சில பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பதவி விலகல்

சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் தொடர்பிலான குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் தான் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது துணை நடிகை ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த செய்திகள் இன்னும் மறைந்து போகாத பட்சத்தில் தற்போது பாஜக கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் தொடர்பிலான குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

Bank of India வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மாற்றம்!

அதாவது சமூக வலைதளங்களில் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை மறுத்த அவர், தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தமிழ் மக்களுக்கும், எனது கட்சியினருக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்பது தெரியும்.

TN Job “FB  Group” Join Now

எனது கட்சிக்காக எவ்வித பலனையும் எதிர்பாராமல் 30 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இப்படி இருக்க இன்று காலை சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய சில அவதூறான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். எனது கட்சி பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!