தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு அரசு வேலை !
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவனம் |
பணியின் பெயர் | தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 22.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நிறுவன காலிப்பணியிடங்கள்:
தொழில் நுட்ப உதவியாளர் மற்றும் திரைப்படக் கருவி இயக்குபவர் பதவிக்கு தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தொழில் நுட்ப உதவியாளர் தகுதிகள்:
எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளோமா அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திரைப்படக் கருவி இயக்குபவர் கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
- தொழில் நுட்ப உதவியாளர் – ரூ.19500 – ரூ.62000
- திரைப்படக் கருவி இயக்குபவர் – ரூ.19500 – ரூ.62000
விண்ணப்பிக்கும் முறை:
மனுதாரரின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி அனுபவ தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு, சான்றிதழ்களின் நகல்களுடன் 22.01.2021 மாலை 5 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
நாமக்கல் கவிஞர் மாளிகை,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009.
Download Ranipet Notification 2021 Pdf
Download Tirupattur Notification 2021 Pdf
Download Chengalpattu Notification 2021 Pdf
Download Krishnagiri Notification 2021 Pdf