அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?

0
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?

வரவிருக்கும் மே மாதத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு குவைத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மே 1ம் தேதி முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

விடுமுறை அறிவிப்பு

வழக்கமாக பொது விடுமுறைகள், வார இறுதி விடுமுறைகள் உட்பட ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 5 முதல் 10 நாட்கள் வரை விடுமுறைகள் வழங்கப்படுவது உண்டு. இதில் சிறப்பு விடுமுறைகளாக மத விடுமுறைகள் இணைந்தால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது குவைத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மே 1ம் தேதி முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இஸ்லாமிய நாடான குவைத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இந்த நாட்களில் வழக்கமாக பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது உண்டு.

சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் – 180 நாட்களுக்கு மேலும் நீ்ட்டிப்பு!

அந்த வகையில் இந்த ஆண்டு ஈத் அல் பித்ர் பண்டிகையானது மே 1 ஆம் தேதி தொடங்கி மே 5 ஆம் தேதி முடிவடையும் என்று குவைத்தின் சிவில் சர்வீஸ் கமிஷன் (சிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதனால் குவைத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊழியர்களுக்கும் வரும் மே மாதம் 1ம் தேதி துவங்கி அடுத்த 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை முடித்து அனைத்து அமைச்சகங்களும், மாநில அதிகாரிகளும் மே 8 ஆம் தேதி மீண்டும் பணியைத் தொடங்குவார்கள் என்று CSC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இருப்பினும் சிறப்பு வேலை நேரங்களைக் கொண்ட மாநில அதிகாரிகள் தங்கள் பணி நேரத்தை பொது நலனுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் குவைத்தில் உள்ள வல்லுநர்கள் மற்றும் வானியல் மையங்கள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பை நிறைவு செய்யும் என்றும், ஈத் அல் பித்ரின் முதல் நாள் மே 2ம் தேதி என்றும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!