சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் – 180 நாட்களுக்கு மேலும் நீ்ட்டிப்பு!

0
சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் - 180 நாட்களுக்கு மேலும் நீ்ட்டிப்பு!
சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் - 180 நாட்களுக்கு மேலும் நீ்ட்டிப்பு!
சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் – 180 நாட்களுக்கு மேலும் நீ்ட்டிப்பு!

கொரோனா கால கட்டத்தில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டம் அல்லது காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.

காப்பீடு திட்டம்:

இந்தியா முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் மிகவும் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏராளமானோர் உயிரிழந்தனர். அத்துடன் கொரோனா முதல் அலையின்போது கொரோனா நோயாளிகளை கையாளவும் ஏராளமான செவிலியர்கள், மருத்துவர்கள் தேவைப்பட்டனர்.

TN TRB தமிழக அரசு பள்ளிகளில் 9,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

மேலும் இவர்கள் கொரோனாவை நேரடியாக கையாளுவதால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதனால் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அன்று செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தில் ஆஷா பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், சிறப்பு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள்,ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பயன் பெறலாம்.

இதையடுத்து தினக்கூலிக்கு செல்வோர், தன்னார்வலர்கள், வெளிப்பணி ஒப்படைப்பில் உள்ளவர்கள், எய்ம்ஸ், ஐஎன்ஐ, மத்திய அரசு, மாநில அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோர் உள்ளிட்டவர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். மேலும் இத்திட்டம் குறித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்திற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளது. இதனை தற்போது 180 நாட்களுக்கு மேலும் நீட்டிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!