ஏப்ரல் 27 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஏப்ரல் 27 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 27 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 27 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளிகள் நடத்தப்பட முடியாததால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா – 2,812 பேர் பலி!!

இது குறித்து தெலுங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி கூறுகையில், ‘தெலுங்கானா பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி துவங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை. இந்த விடுமுறை நாட்கள் முடிவடையும் நிலையில், அப்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து ஜூன் 1ஆம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here