பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- முக்கிய எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் பொதுமக்களிடம் பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலை:

மிக்ஜாம் புயல் கடந்த இரண்டு நாளில் மட்டுமே தமிழகத்திற்கு மிக பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கார், வீடு உள்ளிட்டவைகளுக்கு தான் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர உயிர் சேதம் இந்த ஆண்டில் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது வரையிலும் பெரும்பாலான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தான் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இரண்டு நாட்களும் வெள்ளத்தில் சிக்கி உணவுக்கு போராடிய பொதுமக்களுக்கு ஆவின் பால், உணவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!

ஆனால், இந்த இக்கட்டான சூழலையும் சாதகமாக பயன்படுத்தி பலரும் தண்ணீர் பாட்டில், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைக்காரர்கள் மீது பொதுமக்களும் புகாரளிக்கலாம். இது மட்டுமல்லாமல், சென்னையில் தொடர் மழையால் வெளி மாவட்டங்களில் இருந்தும் போதுமான காய்கறிகள் வராமல் அனைத்து காய்கறிகளும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!