SSC CGL தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!
SSC CGL தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
SSC CGL:
Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Combined Graduate Level Examination குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 17,727 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது . தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி, இத்தேர்வானது 09.09.2024 முதல் 26.09.2024ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் Staff Selection Commission ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Combined Graduate Level Examination-க்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.


























