SSC CGL விண்ணப்பதாரர்களுக்கு அலெர்ட்…!! அனுமதி அட்டை வெளியீடு… ” பதிவிறக்கம் முறை உள்ளே”..!!
SSC CGL அட்மிட் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பீகார், வடமேற்கு மண்டலம், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்குப் பகுதிக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) 2024-க்கான தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தெரிவித்துள்ளது. SSC CGLக்கான முதல் தேர்வு செப்டம்பர் 09.09.2024 தொடங்கி செப்டம்பர் 26.09.2024 வரை மேலே குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Reserve Bank of India-வில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!
SSC CGL ADMIT CARD பதிவிறக்கும் முறை:
1. முதலில் ssc.govn.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் ADMIT CARD அல்லது EXAM ADMIT CARD லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
3. முகப்பு பகுதியில் கீழ் தோன்றும் மெனுவில் CGL 2024 EXAM என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
4. அதில், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்.
5. விண்ணப்பம் முழுமை அடைந்ததும் “SUBMIT” என்ற பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்று திரையில் காட்டும்.
6. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ADMIT CARD திரையில் காட்டும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


























