இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை.. அதிபர் அநுர குமார திட்டவட்டம்!!
இலங்கையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜஃப்னா பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார். அதில், ‘தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்’.
‘இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் மூலம் உள்ளூர் மக்களே ஆட்சி செய்ய வழிவகை செய்யப்படும்’. ‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது’. ‘இலங்கை கடல் எல்லைக்குள் தமிழ்நாடு மீனவர்கள் நுழைவது தடுத்து நிறுத்தப்படும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
























