விளையாட்டு செய்திகள் – அக்டோபர் 2018

0

விளையாட்டு செய்திகள் – அக்டோபர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018

இங்கு அக்டோபர் மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்

விளையாட்டு செய்திகள்

 கிரிக்கெட்

இங்கிலாந்திற்கு எதிராக பார்வையற்றோருக்கான டி20 தொடரை இந்தியா வென்றது

 • இங்கிலாந்திற்கு எதிராக பார்வையற்றோருக்கான டி20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.

இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர்

 • சச்சின் டெண்டுல்கருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று சாதனை படைத்தார் பிருத்வி ஷா.

விரைவாக 24 டெஸ்ட் சதத்தை எடுத்த கிரிக்கெட் வீரர்

 • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டொனால்ட் பிராட்மேனிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 24 சதங்களை அடித்து இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி சாதனை.

U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட்

 • இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து இந்திய U-19 ஆசிய கோப்பையை வென்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்

 • மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றது.

பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

 • அபுதாபியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட்

 • மும்பை டெல்லி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது

விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை

 • இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வுபெறுகிறார்

 • மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

300 ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்த இரண்டாவது நபர்

 • 300 ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்த ஐசிசி எலைட் பேனலின் இரண்டாவது உறுப்பினரானார் இங்கிலாந்தின் கிறிஸ் பிராட். இலங்கையின் ரஞ்சன் மதுகல்லேவை விட 36 போட்டிகளில் பின் தங்கியுள்ளார்.

டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்

 • பெய்ஜிங்கில் நடந்த சீன ஓபன் இறுதிப்போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி தனது 30 வது WTA ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

சாண்டோ டொமின்கோ ஓபன் டென்னிஸ்

 • லியாண்டர் பயஸ், மிஜுவல் ஏஞ்சல் ரெய்ஸ்-வரேலாவுடன் இணைந்து சாண்டோ டொமின்கோ ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்

 • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குரோஷியாவின் போர்னா கரிக்கை தோற்கடித்து நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார்.

விம்பிள்டன் டென்னிஸ் 2019

 • 2019 விம்பிள்டன் முதல் ஐந்தாவது-செட் டைபிரேக்கர்களை அறிமுகப்படுத்த திட்டம்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர்

 • சமீபத்திய ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ரோகன் போபண்ணாவை பின்னுக்குத் தள்ளி 38வது இடத்துக்கு முன்னேறி திவிஜ் சரண் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் புதிய நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஆனார்.

மற்றவை

31வது இந்திய ரயில்வே சதுரங்க போட்டி

 • திருச்சி, தமிழ்நாட்டில் 31வது இந்திய ரயில்வே சதுரங்க போட்டி தொடங்கியது.

36 வது தேசிய விளையாட்டு

 • கோவாவில் 36 வது தேசிய விளையாட்டு 2019ல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெறும்.

ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ்

 • லெவிஸ் ஹாமில்டன் ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸில் 80-வது துருவ நிலை பட்டத்தை பதிவு செய்தார்.

IBSF உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

 • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் ஐபிஎஸ்எஃப் உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பட்டத்தை வென்றார்.

இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான்

 • சாக்ஷம் பெடல் புது தில்லியில் நடைபெற்ற இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் டெபோரா ஹெரால்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 50 கிலோ மீட்டர் பிரிவில் ஸ்ரீதர் சாவனுர் வென்றார்.

செஸ் ஒலிம்பியாட்

 • செஸ் ஒலிம்பியாடில் ஆண்களுக்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஆறாவது இடத்தையும் பெண்களுக்கான போட்டியில் இந்திய பெண்கள் எட்டாவது இடத்தையும் பிடித்தனர்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

 • சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தலைமையிலான 30 உறுப்பினர்கள் குழு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சார்பாக களமிறங்குகின்றனர்.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள்

 • ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடும் வீரர் துஷர் மேனே வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
 • தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் முதல் ஒலிம்பிக் அளவிலான ஜூடோ போட்டியில் பதக்கத்தைப் பெற்றார்.
 • ஆண்கள் 62 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கம் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் ஜெர்மி லால்ரிநுண்கா. ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சந்தீப் சௌதிரி, 1500 மீட்டர்பெண்கள் ஓட்டத்தில் ராஜு ரக்ஷிதா, ஆண்கள் 50 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்க பதக்கம் வென்றனர்.
 • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றார்.
 • சீனாவின் லீ ஷிஃபெங்கிடம் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரரான லக்ஷியா சென் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.
 • இந்திய பெண்கள் ஹாக்கி அணி அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மலேசியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது
 • ஆண்கள் 5000 மீட்டர் நடை பந்தயத்தில் சூரஜ் பன்வார் வெள்ளி வென்றார்.
 • ஜம்ப் போட்டியில் பிரவீண் சித்ராவேல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • ஆகாஷ் மாலிக், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

 • ஆண்கள் பேட்மின்டன் அணி வெண்கலத்தை வென்றது.
 • ஆண்களுக்கான 49 கிலோ பவர் பளுதூக்கும் போட்டியில் பர்மன் பாசா ​​வெள்ளிப்பதக்கமும், பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
 • பெண்கள் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில்[நீச்சல்] தேவன்ஷி சதிஜா வெள்ளி வென்றார், ஆண்கள் 200 மீட்டர் தனி நபர் மெட்லே பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 • ஏக்தா பையான் பெண்களுக்கான கிளப் எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் மோனு கங்கஸ், ஆண்கள் 200 மீ ஓட்டத்தில் ஆனந்தன் குணசேகரன் மற்றும் ஜெயந்தி பெஹராஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
 • ஹர்விந்தர் சிங் ஆண்கள் தனி ரீகர்வ் பிரிவில் [வில்வித்தை] தங்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் போட்டி F11 பிரிவில் மோனு கங்காஸ் வெள்ளி வென்றார், முகம்மது யாசீர் ஆண்கள் குண்டு எறிதல் F46 பிரிவில் வெண்கலத்தை வென்றார்.
 • நாராயண் தாகூர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், தூப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் தங்கம் வென்றனர்.
 • ஆண்கள் வட்டு எறிதலில் சுரேந்தர் அனீஷ் குமார், ராம் பால் ஆண்கள் உயரம் தாண்டுதலில் மற்றும் குண்டு எறிதலில் விரேந்தர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
 • சுந்தர் சிங் குர்ஜர் ஈட்டி எறிதல் ஆண்கள் F46 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
 • தீபா மாலிக் மகளிர் F51 / 52/53 பிரிவு தட்டு எறிதல் போட்டியில் 10.71 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனையை படைத்தார்.
 • ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் இந்தோனேசியாவின் உகுன் ருகெண்டியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 • ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் தருண் சீனாவின் யுயாங் காவோவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.

சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பை

 • இறுதிப்போட்டியில் இந்தியாவை 3-2 என்ற கணக்கில் பிரிட்டன் வீழ்த்தி, 2018 சுல்தான் ஜோகர் ஹாக்கி கோப்பையை வென்றது.

 சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணி சீனா பயணம்

 • இந்திய கால்பந்து அணி 76 வது இடத்தில் இருக்கும் சீனாவிற்கு எதிராக சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க சீனா பயணம்.

நவம்பர் 10 ம் தேதி நேரு டிராபி படகு போட்டி நடைபெறுகிறது

 • கேரளாவின் புகழ்பெற்ற நேரு டிராபி படகு போட்டிகள் நவம்பர் 10 ம் தேதி ஆலப்புழாவின் குட்டநாட்டில் நடைபெறும்.
 • கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப்போட்டி இரண்டு மாதங்கள் தாமதமாகி விட்டன.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்

 • ஓடென்ஸில் நடைபெறும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிக்குள் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சைனா நேவால் நுழைந்தனர்.

டெல்லி ஆண்கள் அரை மாரத்தான் போட்டி

 • எத்தியோப்பியன் அண்டமலக் பெலிஹூ ஆண்கள் பிரிவில் வென்று, தனது முதல் ஏர்டெல் டெல்லி அரை மாரத்தான் போட்டியில் வென்றார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்

 • முதல் நிலை வீராங்கனை தை த்சூ யிங் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாய்னா நேவாலை வீழ்த்தினார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்

 • ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடங்கியது.
 • உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்பில் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளி வென்றார். இது புடாபெஸ்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் தாகோடோ ஓட்டோகுரோவிடம் தோல்வி அடைந்தப்பின் பஜ்ரங் புனியா வெல்லும் முதல் பதக்கமாகும்.
 • பூஜா தண்டா ஹங்கேரியிலுள்ள புடாபஸ்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் ​​57 கிலோ எடைபிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன்

 • பிரஞ்சு ஓபன் பேட்மின்டன் போட்டியில் பாரிஸ் தொடங்கியது.

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்

 • சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை சவுரவ் கோத்தாரி பிரிட்டன் லீட்ஸில் நடைபெற்ற போட்டியில் வீழ்த்தி 2018 உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி

 • ஓமனில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

வாலென்சியா போட்டி

 • கென்யாவின் தூர ஓட்டக்காரரான ஆபிரகாம் கிப்டம் வாலென்சியா போட்டியில் வென்றார், அரை மராத்தான் போட்டியில் 58 நிமிடம் 18 நொடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்தார்.

ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ்

 • ITTF சேலஞ்சு பெல்ஜியம் ஓபன் தொடரில் 21 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் அயிகா முகர்ஜி வெள்ளி பதக்கம் வென்றார்.

ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டி

 • இங்கிலாந்தில் நடைபெற்ற ஐஸ்லே ஆஃப் மேன் சர்வதேச சதுரங்க போட்டியில் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்சை வென்றார் கிராண்ட்மாஸ்டர் அதிபன். இதன்மூலம் மூன்றாவது இடம் பிடித்தார்.

 பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப்

 • இந்திய கோல்ப் வீரர் காலின் ஜோஷி பானாசோனிக் ஓபன் இந்தியா கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டி

சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் டூர் போட்டியில் பங்கஜ் அத்வானி பட்டம் வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here