விளையாட்டு செய்திகள் – மே 2019

0

விளையாட்டு செய்திகள் – மே 2019

இங்கு மே 2019 மாதத்தின் முக்கியமான விளையாட்டு செய்திகள் – மே 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மே 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – மே 2019

கிரிக்கெட் :

ஐ.பி.எல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனை படைத்தார் ரியான் பராக்

 • ஐ.பி.எல் போட்டியில் அரை சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனை படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக். புது தில்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசாமைச் சேர்ந்த 17 வயதான ரியான் பராக் இந்த சாதனையை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறை ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை அணி சாதனை

 • 12வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர். இந்த ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
 • முதல் இடத்தை பிடித்து கோப்பையை தட்டி சென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 கோடி வழங்கப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல் போட்டித் தொடரில் 4வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர்

  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி, ஐசிசி-யின் முதல் போட்டி நடுவராக பணியாற்ற இருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில், ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்று இருந்தார் கிளாரே போலோசாக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி உலகக் கோப்பை: ஒவ்வொரு அணிக்கும் ஊழல் எதிர்ப்பு அதிகாரி

 • நடக்கவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை ஊழல் இல்லாமல் நடைபெற, பங்கேற்க உள்ள 10 அணிகளுக்கும் தலா ஒரு ஊழல் எதிர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.

கிரிக்கெட்  உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வப் பாடலை வெளியிட்டது .சி.சி.

 • பிரபலமான தொடர்களின் போது அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிகாரப்பூர்வமான பாடல்கள் வெளியிடப்படும். அதன்படி 2019 உலகக்கோப்பைக்கான பாடலை லாரின் ருடிமென்டல் பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ. தேர்தல் அக்டோபர் 22 அன்று நடக்கவுள்ளது

 • அக்டோபர் 22 ஆம் தேதி பி.சி.சி.ஐ. தேர்தல் நடைபெறும் என்று நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அமிகஸ் குறியேவவாக நியமித்த பி.எஸ். நரசிம்ஹா அவர்களின் ஆலோசனையின் படி இந்த தேர்தல் தேதியை நிர்வாகிகள் குழு அறிவித்துள்ளது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 மே 30 இல் தொடங்கவுள்ளது

 • 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி ஜூலை 14-ந் தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5-வது முறையாகும். முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. 1983 மற்றும் 2011 உலக சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தை தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5 அன்று சவுத்தாம்ப்டனில் விளையாடவுள்ளது.

கால்பந்து:

பெண்கள் கால்பந்து விளையாட்டிற்கான இரண்டு புதிய விருதுகள்

 • பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் இருந்து சிறந்த பெண் கோல்கீப்பர், சிறந்த பெண்கள் அணி ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

2022 உலகக் கோப்பை தோஹா

 • தோஹாவிலிருந்து 15 கிமீ தெற்கே அல் வக்ராவில் அமைந்துள்ள அல் ஜநாப் ஸ்டேடியம் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து குரூப் ஸ்டேஜ் போட்டிகளை நடத்த உள்ளது.

FIFA 2022 உலகக் கோப்பை போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கும் முடிவை கைவிட்டது

 • கத்தார் நகரில் நடைபெறவுள்ள 2022 உலகக் கோப்பை போட்டியில் முன்மொழியப்பட்ட விரிவாக்கத்தை கைவிட FIFA முடிவு. உலகக் கால்பந்து அணியின் தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆவர்.

 டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்

 • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற முதல் பெண் எனும் சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 6-4, 2-6, 6-3 என்ற கணக்கில் ரபேல் நடாலை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் இவர், நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறியவர் ரபேல் நடால் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் மூன்றாவது மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 33 முறை மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமன் செய்தார் ஜோகோவிச்.

மற்றவை:

சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்

 • நன்னிங், சீனாவில் மே 19 முதல் 26 வரை நடைபெறும் சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பி.வி. சிந்து, கே. ஸ்ரீகாந்த் மற்றும் சைனா நேவால் தலைமையில் பங்கேற்க உள்ளனர்.

ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்க்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

 • ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு, விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க ஹாக்கி இந்தியா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவர் 2015 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருது, 2017 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டில் உலகின் முதல் இடத்தை அபூர்வி பிடித்தார்

 • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணையான அபூர்வி சாண்டெலா முதலிடத்தையும் அஞ்சும் மௌத்கில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி

 • மலேசியாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பாவும், ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் கோஷல் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர். இந்த கோப்பையை முதல்முறையாக சவுரவ் கோஷல் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய போட்டியில் ஒரே நேரத்தில் இரு இந்தியர்கள் மகுடம் சூடுவது இதுவே முதல்முறையாகும்.

ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை

 • போலந்து, வார்சாவில் நடைபெறும் 36 வது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் கவுரவ் சோலங்கி மற்றும் மனிஷ் கவுசிக் தங்கம் வென்றனர். இது தவிர, இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் வெற்றி பெற்று லீவிஸ் ஹாமில்டன் மீண்டும் முதலிடம் 

 • ஸ்பெயினில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலிடம் பிடித்தார். ஹாமில்டன், இந்த பந்தயத்தின் மிக விரைவான லேப்பை முடித்ததற்காக ஒரு கூடுதல் புள்ளியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டவுண் அண்டர் சுற்றுப்பயணத்தின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி

 • பெர்த் நகரில் நடந்த ஐந்தாவது மற்றும் டவுண் அண்டர் தொடரின் இறுதி போட்டியில், இந்திய அணி 2-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

தாய்லாந்து ஜூனியர் மற்றும் கேடட் ஓபன்

 • தாய்லாந்து ஜூனியர் மற்றும் கேடட் ஓபன்ல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஓஷிகிக் கோஷ் மற்றும் ஆஷிஷ் ஜெயின் மற்றும் சயானி பாண்டே பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஜூனியர் சிறுவர்கள் பிரிவில் மானுஷ் ஷா, ரீகன் அல்புகெர்கெகி மற்றும் தீபீட் பாட்டீல் ஆகியோர் நான்கு வெண்கல பதக்கங்களை வென்று வெற்றி பெற்றுள்ளனர்.

புரூக்ஸ் கோப்கா பிஜிஏ சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்தார்

 • பிஜிஏ சாம்பியன்ஷிப் போட்டியில் புரூக்ஸ் கோப்கா ஏழு-ஸ்ட்ரோக் முன்னணி கைப்பற்றி மேஜர் கோல்ஃப் வரலாற்றில் மிகச்சிறந்த சாதனையை படைத்தார்.

தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது

 • ஜின்சியானில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி தென் கொரியாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

 சுதிர்மான் கோப்பை

 • இரண்டாவது மற்றும் கடைசி குழுப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் 10 முறை சாம்பியனான சீனாவிடம் இந்தியா வீழ்ந்து சுதிர்மான் கோப்பை கலப்பு அணி பேட்மின்டன் போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்திய ஓபன் குத்துச்சண்டை

 • இந்தோரில் நடந்த இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில், சக நாட்டு வீராங்கனை நிகத் சாரின் 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் 6 முறை உலக சாம்பியன் ஆன இந்திய வீராங்கனை மேரி கோம்

கிராண்ட்மாஸ்டர் சஹாக் க்ரோவர் இரண்டு பதக்கம் வென்றார்

 • SWVG அர்னால்ட் கிளாசிக் ராபிட் மற்றும் ப்ளிட்ஸ் செஸ் போட்டி யில் கிராண்ட்மாஸ்டர் சஹாக் க்ரோவர் இரண்டு பதக்கம் வென்றார். இந்த ஆண்டு நிகழ்வு ஹாலிவுட் பிரபலம் மற்றும் கலிஃபோர்னியாவின் முன்னாள் கவர்னர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் கஸ்பாரோ செஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.

இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி

 • எல். சரிதா தேவி இந்தியா ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் 60 கிலோ தங்க பதக்கம் வென்றார். எம்.சி. மேரி 51-0 என்ற கோல் கணக்கில் வான் டால்டி யை வீழ்த்தி தனது இரண்டாவது தங்கத்தை வென்றார்.

PSA சேலஞ்சர் சுற்றுப்பயணம்

 • PSA சேலஞ்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் இந்திய ஸ்குவாஷ் வீரர் மகேஷ் மங்கோன்கர் ஸ்பானிநார்ட் பெர்னட் ஜுமெய்னை வீழ்த்தி செகிஸுய் ஓபன் ல் வெற்றிப்பெற்றார்.

 சுதிர்மான் கோப்பை

 • ஜப்பானை வீழ்த்தி 11 வது சுதிர்மான் கோப்பை பட்டத்தை சீனா வென்றது. சீனாவின் ஷி யூகி உலக சாம்பியனான கெண்டோ மொமோட்டோவை வீழ்த்தினார். ஜப்பான் இதுவரை பேட்மின்டன் உலக கலப்பு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நானிங்கில் நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது சீனா.

மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2019

 • லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடிஸ் அணிக்காக மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் 2019 பட்டத்தை வென்றார், ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாம் இடம் பிடித்தார், மெர்சிடஸ் அணியின் வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு உலக கோப்பை

 • துப்பாக்கிச்சூடு உலக கோப்பைத் தொடரின் முதல் நாளில் பெண்களின் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சூடு பிரிவில் அபுர்வி சண்டேலா தங்கம் வென்றார். இந்தப் பருவத்தில் அபுர்வி சண்டேலா பெறும் இரண்டாவது தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி

 • ரஹி சர்னாபாத் உலக சாம்பியன் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியானா ஒலினா கொஸ்டேவிக்கை 37-36 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தங்கம் வென்றார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். சௌரப் சவுதரி ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார்.

 வில்வித்தை உலக கோப்பை

 • ரஜத் சௌஹான், அபிஷேக் வர்மா மற்றும் அமன் சாய்னி ஆகியோரின் ஆண்கள் அணி துருக்கியின் அன்டாலியாவில் வில்வித்தை உலகக் கோப்பை வெண்கலப் பதக்கத்தை வென்றது.
 • ஜோதி சுரேகா வென்னம், மஸ்கன் கிரார், ஸ்வாதி தூத்வால் ஆகியோரின் மகளிர் அணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டனின் லயலா அன்னிசன், ஏலா கிப்சன் மற்றும் லூசி மேசன் ஆகியோரின் மகளிர் அணியுடன் 2 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

J80 உலக சாம்பியன்ஷிப்

 • ஜூலை 13 முதல் 20 வரை ஸ்பெயினில் பில்வோவில் நடத்தப்படவுள்ள J80 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணியை ஆசிய இளைஞர் சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் ரோஹினி ராவ் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.
 • J80 இப்போட்டியானது துறைமுகங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகள் அல்லாத பாதுகாக்கப்பட்ட சூழலிலுள்ள நீர்நிலைகளில் அதி நவீன விளையாட்டு படகுகள் கொண்டு  நடத்தப்படவுள்ளது.

இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால்

 • 15 ம் தேதி ஜப்பானில், ஹிரோஷிமாவில் தொடங்கும் ஹாக்கி இந்தியாவின் 18 வயதிற்குட்பட்ட FIH மகளிர் தொடர் இறுதிப் போட்டிகளுக்கு, ஹாக்கி இந்தியா ராணி ராம்பாலை கேப்டனாக அறிவித்தது மற்றும் அனுபவமுள்ள கோல்கீப்பர் சவிதா துணை கேப்டனாக செயல்படுவார்.

மனு பாக்கர் இந்தியா 7 வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றார்

 • துப்பாக்கி சுடுவதில், இளம் துப்பாக்கி வீரர் மனு பாக்கர் இந்தியாவின் ஏழாவது ஒலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்றார். ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற சர்வதேச உலகக் கோப்பை போட்டியின் 10 மீட்டர் காற்று பிஸ்டல் நிகழ்வில் நான்காவது இடம் பிடித்தார். இது பெண்களின் 10 மீட்டர் பிஸ்டலில் இந்தியாவின் முதல் ஒதுக்கீடு ஆகும்.

துப்பாக்கிச்சுடும் போட்டி

 • ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 5 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
 • சீனா 2 தங்கப்பதக்கத்துடன் மொத்தம் 9 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

Download PDF

விளையாட்டு செய்திகள் – மே 2019

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!