விளையாட்டு செய்திகள் – ஜூன் 2019

0

விளையாட்டு செய்திகள் – ஜூன் 2019

இங்கு ஜூன் 2019 மாதத்தின் முக்கியமான விளையாட்டு செய்திகள் – மே 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் –ஜூன் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019

விளையாட்டு செய்திகள்

கிரிக்கெட்

யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

  • இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் அவரது 19 வருட கால கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு உலக டி 20 கிரிக்கெட்டில் யுவராஜ் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து படைத்தார். ஒரு சர்வதேச போட்டியில் இந்த சாதனையை அடைந்த இரண்டாவது வீரர் (ஹெர்செல் கிப்ஸ் பிறகு) யுவராஜ் ஆவார்.

பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டருடன் இணைந்து உலகக்கோப்பை போட்டித்தகவல்களை வழங்கவுள்ளது ஐசிசி

  • ரசிகர்களின் பெரும் ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றுடன் இணைந்து உலகக்கோப்பை போட்டித்தகவல்களை வழங்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் ஆட்டத்தின் சிறப்பம்சங்கள், அறிக்கைகள், லைவ் ஸ்கோர் ஆகியவற்றை ஐசிசி டிஜிட்டல் சேனல்களில் பெற முடியும்.

பி.சி.சி. யின்    தேர்தல் ஆணையராக முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலாஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார் 

  • பி.சி.சி.ஐ யின் வருடாந்தர பொதுக்கூட்டத்திற்கு தேர்தல் ஆணையராக முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபாலாஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.யின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று நிர்வாகிகள் குழு கடந்த மாதம் அறிவித்தது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 2022ல் பெண்கள் கிரிக்கெட் அணி

  • பெண்கள் கிரிக்கெட் அணி பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளின் ஒரு பகுதியாக சேர்க்கப்படவுள்ளது , ஏனெனில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சிஜிஎஃப் 2022 பதிப்பில் அதை சேர்க்க பரிந்துரைத்தது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சிஜிஎஃப்) நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த பரிந்துரை செய்யப்பட்டது. கிரிக்கெட் முன்பு காமன்வெல்த் போட்டியில் ஒரு முறை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, இதில் 1998 இல் கோலாலம்பூரில் ஆண்கள் அணி விளையாடியது.

உலகக் கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்

  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பையில் 1,000 ரன்கள் எடுத்த வங்காளதேசத்தை சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் சேர்ந்த ஷாகிப் அல் ஹசன். உலகக் கோப்பையில் இதுவரை ஆறு போட்டிகளில் அதிகபட்சமாக 476 ரன்கள் எடுத்தவர் என்ற பெருமைக்குரியவர் இவர். ஏற்கனவே இரண்டு சதங்களை வைத்திருக்கும் இவர் இந்த சாதனையை நிகழ்த்திய 19 வது வீரர் ஆவார்.

 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து இந்தியா கேப்டன் விராட் கோலி சாதனை

  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். விராட் 417 இன்னிங்ஸில் விளையாடி 20,000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்குப் பிறகு 20,000 ரன்களை கடந்த 12 வது பேட்ஸ்மேன் மற்றும் மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார்.

கால்பந்து:                                              

2023 ஆசிய கால்பந்து கோப்பையை  சீனா நடத்துகிறது.

  • தென் கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஏலத்தை கைவிட்டதை அடுத்து ஆசிய நாடுகளுக்கான 2023 கால்பந்து போட்டியை சீனாவில் நடக்கவிருக்கிறது. இதை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு பாரிசில் உறுதிப்படுத்தியது.

லிவர்பூல் மற்றும் செல்சியா ஸ்ட்ரைக்கர் பெர்னாண்டோ டோரஸ் கால்பந்தில் இருந்து ஓய்வு 

  • முன்னாள் லிவர்பூல் மற்றும் செல்சியா ஸ்ட்ரைக்கர் பெர்னாண்டோ டோரஸ் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஸ்பெயினார்ட் லிவர்பூலுடன் நான்கு சீசன்களில் 81 கோல்களை அடித்தார் மற்றும் செல்சியாவுடன் சாம்பியன்ஸ் லீக், யூரோபா லீக் மற்றும் எஃப்ஏ கோப்பை வென்றுள்ளார்.

UEFA பட்டத்தை வென்றது போர்ச்சுகல்

  • UEFA தேசிய லீக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி போர்ச்சுகல் ஆகும். இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போர்ச்சுகல் அணிக்காக கோன்காலா குயெட்ஸ் ஒரு கோலை அடித்தார்.

டென்னிஸ்

12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று நடால் சாதனை

  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ரோலண்ட் கர்ரோஸில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியமை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் நடால் வெற்றி பெற்றார்.
  • ஒரே கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 12 ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் வீரர் எனும் சாதனை படைத்தார் ரபெல் நடால், ஒட்டுமொத்தமாக இவர் 12 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஒற்றையர் பட்டங்களை பெற்று ரோஜர் பெடெரெர் முதல் இடத்திலும், 15 ஒற்றையர் பட்டங்களை பெற்று மூன்றாம் இடத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிக் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி.எப் ஆண்கள் பியூச்சர்ஸ்  டென்னிஸ்

  • மூன்றாம் இடத்தில உள்ள சிதார்த் ராவத் ஜப்பானின் ரியோ நோஜூச்சியை 7-5, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி  ஐடிஎஃப் ஆண்கள் பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றார்.

மற்றவை:

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்

  • ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மாகோவில் ஜூன் 26 முதல் 30 வரை நடக்க இருக்கிறது. 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுகின்றனர். இதில் போட்டியிடும் வீரர்களின் தேர்வு மே மாதம் சிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது மேலும் இவர்கள் பிரிட்டிஷ் பயிற்சியாளர் கிறிஸ் ரிடெரின் கீழ் பயிற்சி பெறுகின்றனர்.

ஆசிய கலை ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்

ஜிம்னாஸ்டிக்ஸில், மங்கோலியாவின் உளான்பாத்தரில் நடந்த சீனியர் ஆசிய கலை சாம்பியன்ஷிப் – ல் வால்ட் போட்டியில் இந்தியாவின் பிரணாதி நாயக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு  இந்திய வீரர்களின் வில்வித்தை அணி இடஒதுக்கீடு பெற்றது

  • நெதர்லாந்தில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர்களின் வில்வித்தை அணி கால் இறுதிக்கு முன்னேறியது.இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி இடஒதுக்கீடு பெற்றது . 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதல் தடவையாக இந்திய ஆண்கள்  குழு ஒதுக்கீடு பெற்றுள்ளது.

ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019

  • ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 23 பேரை கொண்ட அணியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20 ஆம் தேதி முதல் சீனாவில் உள்ள சுசோவில் நடைபெறவுள்ளது.

 ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை பங்கஜ் அத்வானி வென்றார்

  • இந்தியாவின் பங்கஜ் அத்வானி தோஹாவில் நடைபெற்ற 35 வது ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். பங்கஜ் இப்போது அடுத்த வாரம் தோஹாவில் நடைபெறும் ஐ.பி.எஸ்.எஃப் (IBSF) உலகக் கோப்பையில் பங்கேற்பார்

 உலக தடகள விளையாட்டாக IAAFன் பெயர்மாற்றம்

  • உலக தடகள விளையாட்டின் ஆளும் குழுவான, IAAF-ஐ, உலக தடகள விளையாட்டு என பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது. சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) 1912 இல் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. தற்போது ஒலிம்பிக்கில் இரண்டு முறை 1500 மீட்டர் தங்கப் பதக்கம் வென்ற பிரிட்டனின் செபாஸ்டியன் கோய் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • டோஹாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் அதனைத்தொடர்ந்து நடக்கவுள்ள காங்கிரஸ் கூட்டத்திற்குப்பின் அக்டோபர் மாதம் சட்டப்பூர்வ பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் பெற்ற பின் இந்தப் பெயர்மாற்றம் நடைமுறைக்கு வரும்.

சீனியர் ஆசிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி

  • ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, இந்த மாதம் 19 முதல் 22 வரைமங்கோலியாவில் உள்ள உலான்பாட்டர் நகரில் நடைபெறவிருக்கும் சீனியர் ஆசிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியின் பெயர்களை அறிவித்துள்ளது.
  • ஆண்கள் அணியில் ராகேஷ் குமார் பத்ரா, யோகேஷ்வர் சிங், தபாங் டே மற்றும் அரிக் டே உள்ளனர் .பிரணதி நாயக், சாந்தா தலேகர், பிரணதி தாஸ் மற்றும் பாபியா தாஸ் ஆகியோர் பெண்கள் அணியில் உள்ளனர்.

58 வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பு

  • ஆசிய வெள்ளிப் பதக்கம் வென்ற அன்னு ராணி, செக் குடியரசில் நடந்த ஐ.ஏ.ஏ.எஃப் உலக சவால் நிகழ்வான 58 வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பில் 60 மீட்டர் ஈட்டி எறிதலில் வெண்கலத்தை வென்றார்.

கனடியன் கிராண்ட் பிரிக்ஸ்

  • 2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார். செபாஸ்டியன் வெட்டல் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக இந்தப்போட்டியில் தண்டிக்கப்பட்டார்.

வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்

  • நெதர்லாந்தில் டென் போஷில் நடந்த வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் ரீகர்வ் பிரிவின் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆண்கள் சாம்பியன்ஷிப் அணி 14 வருட இடைவெளிக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஹாக்கி தொடர் ஆண்கள் இறுதிப் போட்டி

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆண்கள் ஹாக்கி இறுதி தொடர் புவனேஷ்வரில் துவங்கியது. காலையில் நடைபெற்ற முதல் போட்டியில், அமெரிக்கா 2 கோல்களில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. இரண்டாவது போட்டி போலந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெறும். ரஷ்யாவுக்கு எதிராக எட்டு முறை சாம்பியன்வென்ற இந்தியா தனது ஆட்டத்தை தொடங்க உள்ளது.

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 ஐ கைப்பற்றியது

  • அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச 4 நாடுகளின் பட்டத்தை வென்றது.

 இந்தியாவின் 63 வது கிராண்ட்மாஸ்டர்  கிரிஷ் A.கௌசிக்

  • மைசூரைச் சேர்ந்த கிரிஷ் A.கௌசிக் ஹங்கேரியில் நடந்த 37 வது பாலாடன் சர்வதேச செஸ் விழாவில் இந்தியாவின் 63 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

விஸ்வநாதன் ஆனந்த்  ஆர்மெக்கெதோன்  விளையாட்டில் தோல்வி அடைந்தார்.

  • நோர்வே அல்டிபாக்ஸ் செஸ் போட்டியின் ஆர்மெக்கெதோன்  விளையாட்டில் நோர்வேயின் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்ஸனுக்கு எதிராக விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு, இந்திய வீரர்கள்  நான்கு ஒதுக்கீடு இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்

  • நெதர்லாந்தில் நடந்த உலக பாரா சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அடுத்து வரும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு, இந்திய வீரர்கள் ரீகர்வ் மற்றும் காம்பௌன்ட் பிரிவுகளில்  நான்கு  இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.
  • ஆண்களுக்கான காம்பௌண்ட் பிரிவில், ஜம்முவின் ராகேஷ் குமார் முதலில் தகுதிபெற்றார், பின்னர் ராஜஸ்தானின்  ஷியாம் சுந்தர் ஸ்வாமி அடுத்ததாக தகுதி பெற்றார்.

பிளாக் ஃபாரஸ்ட் கோப்பை 

  • குத்துச்சண்டையில், இந்தியாவின் ஜூனியர் பெண்கள் ஐந்து தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றனர், அதே நேரத்தில் ஜெர்மனியின் ஸ்வென்னிங்கன், வில்லிங்கனில் நடந்த பிளாக் ஃபாரஸ்ட் கோப்பையில் போட்டியின் சிறந்த அணியாக இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது. இந்தியா, உக்ரைன், ஜெர்மனி, கஜகஸ்தான், லாட்வியா, ஹங்கேரி, லிதுவேனியா, மங்கோலியா, கிரீஸ், போலந்து உள்ளிட்ட பத்து நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன. இப்போட்டியில் சிறந்த அணி என்ற பட்டத்தை இந்தியா அணி வென்றது.

 2023 IOC அமர்வை மும்பையில் நடத்த இந்தியா முன்மொழிகிறது

  • 2023 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) அமர்வை மும்பையில் நடத்த இந்தியா முன்மொழிந்தது, இது 2030 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தும் ஹோஸ்ட் நகரத்தை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்மிண்டன் நட்சத்திர வீரர் லீ சோங் வெய் ஓய்வு

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பேட்மிண்டன் நட்சத்திர வீரர் லீ சோங் வெய் தனது ஓய்வு முடிவை அறிவித்தார், இதன் மூலம் தனது பேட்மிண்டன் விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இந்த விளையாட்டில் நிறைய விருதுகளை பெற்றுள்ளார் ஆனால் ஒரு உலக அல்லது ஒலிம்பிக் பட்டத்தை கூட இவர் வென்றதில்லை என்பது குறிபிடத்தக்கது. லீ சோங் வெய் 2008 முதல் 2012 வரை தொடர்ச்சியாக 199 வாரங்களுக்கு ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பிடித்தவர் ஆவார், ஆனால் இவர் ஆறு உலக மற்றும் ஒலிம்பிக் இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Download PDF

விளையாட்டு செய்திகள் – மே 2019

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!