விளையாட்டு செய்திகள் – டிசம்பர் 2018

0

விளையாட்டு செய்திகள் – டிசம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

இங்கு டிசம்பர் மாதத்தின் விளையாட்டு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

கிரிக்கெட்

கௌதம் கம்பீர் ஓய்வு அறிவிப்பு

  • முன்னாள் இந்திய கிரிக்கெட் தொடக்க வீரர் கௌதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய பெண்கள் ஒரு நாள்மற்றும் டி20 அணி கேப்டன்கள் அறிவிப்பு

  • அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் கேப்டனாக நியமித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஏழு வயதான துணை கேப்டன்

  • டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்ட ஏழு வயதான லெக் ஸ்பின்னர் ஆர்க்கி ஷில்லர், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிம் பெயின் உடன் இணைந்து துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி பிசிசிஐக்கு 60% இழப்பீட்டுத் தொகையை பிசிபி வழங்க உத்தரவு

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) கோரிய தொகையில் 60 சதவீதம் செலுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விவாதத் தீர்மானக் குழு உத்தரவு.

பி.சி.சி.ஐ. ஊழல் எதிர்ப்பு அலகை விரிவுபடுத்துகிறது

  • பிசிசிஐ அமைப்பானது அதன் ஊழல் எதிர்ப்பு அலகை(ACU) விரிவுபடுத்துகிறது.

பாண்டிங் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்தார்

  • முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐசிசி கிரிக்கெட் அரங்கத்தில் முறையாக சேர்க்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்கா Vs பாகிஸ்தான் கிரிக்கெட்

  • தென்னாபிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி பெற்றது.

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் மாற்றம்

  • டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என மாற்றப்பட்டது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

  • முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இலங்கை Vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

  • கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ஐபிஎல் 2019 ஏலம்

  • ஜெய்ப்பூரில் ஐபிஎல் 2019க்கான ஏலம் நடைபெறுகிறது.

ரிஷப் பாண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை சமன் செய்தார்

  • ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ரிஷாப் பாண்ட் ஆறு கேட்சுகளை பிடித்து எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்தார்.
  • பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் வசிம் பாரி ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 7 கேட்சுகளை பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

2018ம் ஆண்டின் பெண்கள் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை ஐசிசிஅறிவித்தது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐசிசி, 2018ம் ஆண்டிற்கான பெண்கள் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது.
  • நியூஸிலாந்தின் சுஜி பேட்ஸ் ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், இந்தியாவின் ஹர்மன் பிரீத் கவுர் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

கிரிக்கெட் போட்டியில் 25 டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வேகமான வீரர்

  • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 25 டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வேகமான வீரர் எனும் சாதனை படைத்தார்[சர் டான் பிராட்மேன் முதலிடம்].

ரஞ்சி டிராபி கிரிக்கெட்

  • மத்தியப் பிரதேச தொடக்க வீரர் அஜய் ரோஹெரா தனது முதல் அறிமுக ஆட்டத்தில் அவுட் ஆகாமல் 267* ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

ஹாக்கி

ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை

  • புவனேஸ்வரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை கால் இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
  • பூபனேஸ்வரில் நடைபெற்ற ஆண்கள்ஹாக்கி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை சூட் அவுட் முறையில் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது பெல்ஜியம் அணி. பெல்ஜியம் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது.

துப்பாக்கிச்சூடு

ISSF யின் நீதிபதிகள் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்

  • சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஸ்.எப்) நீதிபதிகள் குழுவில் ஏழு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியராக பவன் சிங் தேர்வு.

தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டி

  • ஜெய்ப்பூரில் நடந்த 62 வது தேசிய துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டிகளில் (NSCC) மகளிர் ஸ்கீட் பட்டத்தை வென்று ராஜஸ்தானின் மஹேஷ்வரி சௌஹான் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அனைத்து இந்திய போலீஸ் துப்பாக்கிச்சூடு போட்டி 2018

  • ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் 19-வது அனைத்து இந்திய போலீஸ் (AIPDM) துப்பாக்கிச்சூடு போட்டி-2018ஐ உள்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

மற்ற விளையாட்டுகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2018

  • டை-பிரேக்கரில் பேபியானோ கருவானாவை வீழ்த்தி மக்னஸ் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

டாடா மோட்டார்ஸ் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்

  • கோண்டா, உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் டாடா மோட்டார்ஸ் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில், வினேஷ் போகத் 57 கிலோ பிரிவில் தேசிய பட்டத்தை வென்றார். சாக்ஷி மாலிக் 62 கிலோ பிரிவில் வென்றார்.

டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலன்ஞ் 

  • மும்பையில் நடைபெறும் 11வது டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலன்ஞ் பாட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் லக்ஷயா சென்.

புனே சர்வதேச மராத்தான்

  • எத்தியோப்பியாவின் அட்லாவிம் டெபே, 2 மணி நேரம் 17 நிமிடங்கள் 17 விநாடியில் முழு மராத்தானை கடந்து வென்றார். டிஷோம் கெடாசியூ இரண்டாவது மற்றும் பெக்கலி ஆசிபா மூன்றாவது இடம் பிடித்தனர்.
  • பெண்கள் முழு மராத்தான் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த பாஸ்காலியா செப்கோகெய் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் 27 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். எத்தியோப்பியாவின் பிலூ மெக்கோனென் மற்றும் ஃபெக்கிடி திலாஹூன் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைக் பிடித்தனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

  • ஜனவரி 9 முதல் 20 வரை புனேயில் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.

பேட்மின்டன் உலக டூர் ஃபைனல்ஸ்

  • சீனாவின் குவாங்ஜோவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் டூர் ஃபைனல்ஸ் கோப்பையை பி.வி.சிந்து வென்றார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை 21-19, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

37வது சீனியர் தேசிய படகுப்போட்டி (ரோவிங்) சாம்பியன்ஷிப்

  • 37வது சீனியர் தேசிய படகுப்போட்டி (ரோவிங்) சாம்பியன்ஷிப் புனேயில் இராணுவ படகோட்டும் முனையத்தில் துவங்கவுள்ளது.

கபடி வீரர் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தார்

  • கபடி வீரர் அனூப் குமார், தனது 15 வருட கபடி விளையாட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை அறிவித்தார்.

பிரீமியர் பேட்மின்டன் லீக்

  • மும்பையில் பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்கியது.

உலகை சைக்கிளில் வேகமாக சுற்றி வந்து சாதனை புரிந்த இந்திய பெண்

  • இந்தியாவின் பூனே நகரைச் சேர்ந்த 20 வயது வேதாங்கி குல்கர்னி அவர்கள், உலகை, சைக்கிளில், மிக வேகமாகச் சுற்றி வந்த ஆசியர் என்ற ஒரு புதியச் சாதனையைபப் புரிந்துள்ளார்.

16வது மும்பை மராத்தான்

  • 16வது மும்பை மராத்தான் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடைபெறும். சுமார் 50,000 பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ஐந்து பளு தூக்கும் வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்

  • 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட சிறுநீர் மாதிரிகள் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், ஐந்து பளு தூக்கும் வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு பாரிஸில்  அறிவித்தது.

10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை

  • 10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை, சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி, கர்னாலாவில் நடைபெறும்.

பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 3வது பதிப்பு

  • பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது பதிப்பு கர்நாடகாவின் விஜயநகராவில் தொடங்குகிறது.

 

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!