விளையாட்டு செய்திகள் – ஏப்ரல் 2019

0

விளையாட்டு செய்திகள் – ஏப்ரல் 2019

இங்கு ஏப்ரல் 2019 மாதத்தின் முக்கியமான விளையாட்டு செய்திகள் – ஏப்ரல் 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஏப்ரல் 2019

கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணிக்கு ODI போட்டியே விளையாடாத விக்கெட் கீப்பர் வீரர் தேர்வு

  • டிம் பிளண்டெல், 28 வயதான வெலிங்டன் விக்கெட் கீப்பர், அவரது முதல் டெஸ்ட் அறிமுக போட்டியில் சதமடித்தார், ஆனால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெங்குபெற்றதில்லை, இருப்பினும் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்தின் அணியில் 15 வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
  • 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்ட முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.

உலக கோப்பை கிரிக்கெட் 2019:

  • மே 30 இங்கிலாந்தில் தொடகவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 அதிகாரபூர்வ நடுவர்களில் மூன்று உலகக் கோப்பை வென்ற நடுவர்கள் மற்றும் ஒரு இந்திய நடுவர் சுந்தரம் ரவி பங்கேற்க உள்ளனர்.

ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர்

  • கிளாரி போலோசாக் என்னும் பெண் நடுவர் ஆண்களுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டியில் முதல் பெண் நடுவராக பங்கேற்கவுள்ளார். 2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆண்கள் ஒரு நாள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் உலகின் முதல் பெண் கள நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா பாக்கிஸ்தான் ஒருநாள் தொடர்

  • இறுதி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடர் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

உலகக் கோப்பை 2019க்கான இந்திய அணி அறிவிப்பு

  • விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (WK), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யூஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷமி. மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்து வேல்ஸில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதன் மூலம் தோனி தனது 4வது உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளார்.

பப்புவா நியூ கினியா ODI தரத்தை பெற்றுள்ளது

  • உலக கோப்பை கிரிக்கெட் லீக் பிரிவு 2-போட்டிக்கு ஏற்கனவே தகுதியான பப்புவா நியூ கினியா (PNG) ஓமன் நாட்டிற்க்கு எதிராக ஒரு முழுமையான வெற்றியைப் பதிவு செய்து தனது ICC யின் ODI தரத்தை பெற்றுள்ளது.

கால்பந்து:

கிங் கோப்பை ஜூன் 2019

  • இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.

ஹீரோ சூப்பர் கோப்பை 2019

  • ஹீரோ சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் FC கோவா சென்னையின் FC அணியை தோற்கடித்தது, 2019 ஆண்டிற்க்கான சூப்பர் கோப்பையை வென்றது.

சந்தோஷ் டிராபி 2019

  • பஞ்சாப் குரு நானக் ஸ்டேடியத்தில் பிகாஸ் தாபா பஞ்சாப் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வீசஸ் அணி தனது ஆறாவது சந்தோஷ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது.

டென்னிஸ்

2020 ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டு நடைமுறை மாற்றம்

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ITF) 2020 ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி வடிவங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆண்கள் ஒற்றையர் தங்க பதக்கப் போட்டி ஐந்து டைப்ரேக் சுற்றுகளுக்கு பதிலாக இனி மூன்று டைப்ரேக் சுற்றுகளாக நடக்க உள்ளது.

மான்டே கார்லோ டென்னிஸ்

  • மொனாக்கோவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னி, 48-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பேபியோ போக்னி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

மற்றவை:

இந்தியா ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் 16 தங்க பதக்கங்களை வென்றது

  • தைவானு, தைப்பியில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளில் 25 தங்க பதக்கங்களை கைப்பற்றி இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 16 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை இந்தியா வென்றது.

மன்ப்ரீத் கவுரூக்கு நான்கு ஆண்டுகள் விளையாட தடை

  • தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி ஒழுங்குமுறை குழு, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக குண்டு எறிதலில் ஆசிய சாம்பியனான மன்பிரீத் கவுருக்கு நான்கு வருடம் விளையாட தடை விதித்துள்ளது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியா தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது

  • கோலாலம்பூரில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியாவை 4-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது

பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ்

  • ஐந்து முறை உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் மெர்சிடஸ் அணிக்காக பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார். வால்டெரி போடாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

தீபா மாலிக், நியூசிலாந்தின் பிரதமர் சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்

  • ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் தீபா மாலிக் “ஊக்கப்படுத்தும் சாதனைகள்” என்னும் அங்கீகாரம் பெற்ற நியூசிலாந்து பிரதம மந்திரி சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்.
  • 48 வயதான தீபா, 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் குண்டு எரித்தலில் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைகர் உட்ஸ் Master பட்டத்தை வென்றார்

  • அமெரிக்க கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ் ஐந்தாவது முறையாக Master பட்டத்தை வென்றுள்ளார். இது இவரின் 81 வது PGA சுற்றுப்பயண வெற்றியாகும்.

சிங்கப்பூர் ஓபன்

  • ஆண்கள் இறுதிப்போட்டியில் ஜப்பானின் கெண்டோ மோமோட்டா இந்தோனேசியாவின் அன்டனி சினிகா ஜின்டிங்கை வென்று சிங்கப்பூர் ஓபன் 2019 பட்டத்தை வென்றார்.
  • பெண்கள் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோஸோமி ஒகஹாராவை தோற்கடித்து தை ஸு யிங் தனது இரண்டாவது சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார்.

சீன கிராண்ட் பிரிக்ஸ்

  • லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் 1,000 வது உலக சாம்பியன்ஷிப் பந்தயமான சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த தரவரிசையில் முன்னணி பெற்றுள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2019

  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் நடக்கவிருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் உலக மல்யுத்த தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்கவுள்ளார்.

ஏழு வயது இந்திய வீராங்கனை 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்

  • இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் ஏழு வயது இந்திய வீராங்கனை கோலகட்லா அலனா மீனாட்சி இரண்டு தங்க பதக்கங்களைப் வென்றார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019

  • கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதரி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங்23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜபிர் மடரி பல்லியாலில் மற்றும் சரிதா கயக்வத் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
  • 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத் லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 4x400m கலப்பு ரிலே அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் பாலக்காடைச் சேர்ந்த 23 வயதானU.சித்ராதங்கம் வென்றார், ஆண்கள் பிரிவில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். டூட்டி வெண்கலப்பதக்கம் வென்றார். பெண்கள் 4×400 மீட்டர் ரிலேயில் ப்ராச்சி, எம்.ஆர்.பூவம்மா, சரிதாபென் கயக்வத் மற்றும் வி.கே. விஸ்மயா வெள்ளி வென்றனர்.
  • இந்தியா 17 பதக்கங்களுடன் நான்காவது இடத்தை பிடித்தது, இதில் மூன்று தங்கம் மற்றும் ஏழு வெள்ளி பதக்கங்கள் அடங்கும்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • சீனாவின் வூஹனில் ஆசியா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ளது. இந்தியா சார்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.

ஆசிய பளுதூக்கும் போட்டி

  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் நடைபெறுகிறது. இதில் ஜெரேமி லால்ரின்னுன்கா புதிய உலக இளைஞர் மற்றும் தேசிய சாதனையைப் படைத்தார். 16 வயதே ஆன லால்ரின்னுன்கா ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 297 கிலோ (134+163 கிலோ) தூக்கி புதிய சாதனையைப் படைத்தார். 6 சர்வதேச சாதனைகள், 9 தேசிய சாதனைகள் என மொத்தம் 15 சாதனைகளை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனியர் தரவரிசை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

  • முன்னாள் உலக ஜூனியர்1, வீரர் A.S.S. சிரில் வர்மா, சமீபத்தில் கோழிக்கோடில் நடந்த அனைத்து இந்திய-சீனியர்தரவரிசை பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

நீச்சல் வீரர் லீகித் உலக தரநிலையில் ‘பி’ தரத்தை அடைந்துள்ளார்

  • இந்திய நீச்சல் வீரரான எஸ்.பீ. லிக்கித் 62 வது மலேசிய ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ஆண்கள் 100 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து 2019 FINA உலக சாம்பியன்ஷிப்பிற்கான ‘பி’ தகுதித் தரத்தை அடைந்துள்ளார்.

அர்ஜன் சிங் மெமோரியல் சர்வதேச ஹாக்கி போட்டி 2019

  • ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 25 வரை, சண்டிகரில் இந்திய வான்படையின் 2 வது மார்ஷல் அர்ஜன் சிங் மெமோரியல் சர்வதேச ஹாக்கி போட்டியில் நடைபெற்றது. இதில். ஐ.சி.எஃப்., சென்னை அணி ஹைதராபாத் அணியை பெனால்டி ஷூட்அவுட் சுற்று மூலம் தோற்கடித்தது.

ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை 2019

  • பெய்ஜிங்கில் நடந்த ISSF துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை 2019ல் கலப்பு ஏர் ரைபிள் மற்றும் கலப்பு ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்கம் வென்றனர்.
  • 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாக்கர் மற்றும் சௌத்ரியும், ஏர் ரைபிள் போட்டியில் அஞ்ஜூம் மௌத்கில் மற்றும் திவ்யாஞ்ச் சிங் பன்வார் ஆகியோர் தங்கம் வென்றனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019

  • பாங்காக்கில் நடைபெற்ற 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அமித் பங்ஹால் (52kg) தனது இரண்டாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்றார், மற்றும் பூஜா ராணி (81kg) பெண்கள் பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.
  • 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்கள் உள்ளப்பட மொத்தம் 13 பதக்கங்கள் வென்றுள்ளது.

2019 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்

  • இந்திய நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் 2019 உலக பாரா நீச்சல் போட்டி ஆண்கள் 200m IM (SM7 வகுப்பு) பிரிவில் குறைந்தபட்ச நுழைவு நேரத்தை (MET) அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019:

  • பி. வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வூஹான் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்தனர்.

அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்

  • வால்டெரி போட்டாஸ் தனது மெர்சிடிஸ் அணியின் உறுப்பினரான லீவிஸ் ஹாமில்டனின் சவாலை சமாளித்து அசர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்று 2019ஆம் ஆண்டின் முன்னணி ஓட்டுநர்களின் பட்டியலில் முன்னணி வகிக்கிறார். இந்த ஆண்டில் இது போட்டாஸின் இரண்டாவது வெற்றி ஆகும் மற்றும் அவர் பெறும் ஐந்தாவது பட்டம் இதுவாகும்.

2024 உலக டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பம்

  • இந்தியாவின் டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (TTFI) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் 2024ம் ஆண்டிற்கான போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ளது. இதற்கு முன்பு 1987ல் இந்தியா ஒரு உலக சாம்பியன்ஷிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

PDF Download

To Read in English: Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!