இனி இவங்களுக்கு கவலையே இல்ல.. தமிழக அரசு பேருந்துகளில் வந்துள்ள சிறப்பு சலுகை – ஹாப்பி நியூஸ்!

0
இனி இவங்களுக்கு கவலையே இல்ல.. தமிழக அரசு பேருந்துகளில் வந்துள்ள சிறப்பு சலுகை - ஹாப்பி நியூஸ்!
இனி இவங்களுக்கு கவலையே இல்ல.. தமிழக அரசு பேருந்துகளில் வந்துள்ள சிறப்பு சலுகை - ஹாப்பி நியூஸ்!
இனி இவங்களுக்கு கவலையே இல்ல.. தமிழக அரசு பேருந்துகளில் வந்துள்ள சிறப்பு சலுகை – ஹாப்பி நியூஸ்!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு புதிய சலுகையை அளித்துள்ளது. இதனால் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய சலுகை:

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு கடந்த மாதம் அரசு விரைவு பேருந்தில் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பார்சல்கள் அனைத்தும் ஒரே நாளில் சென்றடையும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும் போது பயனாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பார்சல் அனுப்பும் திட்டத்தில் தனியாரை விட கட்டணம் குறைவு என்பதால் மக்கள் அரசு விரைவு பேருந்தில் பார்சல் அனுப்ப ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் மற்றொரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நாடக கலைஞர்கள் அரசு பேருந்துகளில் தங்களது உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக நாடக கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்த பிற இடங்களுக்கு அரசு பேருந்தில் செல்லும் போது இசைக்கருவிகள் மற்றும் தங்களின் கலை பொருட்களை கொண்டு செல்வதில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.

நாட்டை அச்சுறுத்தும் புதுவகை தொற்று, ஒரே நாளில் 67,000 பலி எண்ணிக்கை – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

இது குறித்து நாடக கலைஞர்கள் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த முறை நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது பேசினார். அப்போது, அரசு பேருந்துகளில் நாடக கலைஞர்களின் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறினார். அதன்படி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரசு பேருந்துகளில் தொழில் சார்பாக பயணம் செய்யும் நாடக கலைஞர்கள் தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக நாடக கலைஞர்களுக்கு ஏற்கனவே அரசு பேருந்துகளில் 50% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!