தீபாவளிக்கு முந்தைய நாள் ( அக் 30 ) விடுமுறையா..? முழு விவரம் உள்ளே…
இந்தியா முழுவதும் கொண்டப்படும் பெரும் பண்டிகையான தீபாவளி இந்த வருடம் அக்டோபர் 31 தேதி கொண்டப்படவுள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியாக இப்பண்டிகையை கொண்டாடும் விதமாக நவம்பர் 1 தேதியை பொது விடுமுறையாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், சிவகாசி பட்டாசு உரிமையாளர் சங்கத்தினர், தீபாவளி முந்தைய நாளான அக் 30ம் தேதியும் பொது விடுமுறையாக அறிவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர். மேலும், அக்கடிதத்தில் நவம்பர் 1 தேதியை விடுமுறையாக அறிவித்ததுக்காக நன்றி கூறியுள்ளனர்.



























