நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 30, 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 30, 2018

முக்கிய தினம்:

முக்கிய தினம்:செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்

 • ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் 30 ம் தேதி  உலக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்  (ITD) கொண்டாடபடுகிறது.
 • இது ஐந்தாம் நூற்றாண்டின் வடகிழக்கு இத்தாலியாவின் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரின் நினைவாக கொண்டாடபடுகிறது. இவர் பைபிளை (புதிய ஏற்பாடு) கிரேக்க மொழியிலிருந்து லத்தீன் மொழியில் மொழிபெயர்தவர்.
 • 2018 கருப்பொருள்: Democracy under Strain: Solutions for a Changing World

தேசிய நிகழ்வுகள்:

ஆந்திரப் பிரதேசம்:

186 கி.மி அமைதிக்கான பேரணி

 • பல்வேறு மாநிலங்களில் மாவோயிச கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட மக்கள், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சட்டிஸ்கர் வரையிலான 186 கி.மீ  ‘அமைதி பாதயாத்திரை’ (மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவில்) என்னும் அமைதிக்கான பேரணியில் கலந்துகொண்டனர்.

தெலுங்கு பைபிள் 200வது  ஆண்டு கொண்டாட்டம்:

 • ஆந்திரவில் உள்ள தேவாலையங்கள் இந்த ஆண்டு பைபிளை கிரேக்க மொழியிலிருந்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்து 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார்கள்.

குஜராத்:

ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 • பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட்டில் ஆல்ஃபிரட் உயர்நிலை பள்ளியில் மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார்.

கர்நாடகா

நல்ல சமாரியர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் நாட்டின் முதல் மாநிலம்

 • கர்நாடகாவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு (நல்ல சமாரியர்கள்) சட்டபூர்வ பாதுகாப்பு (அவசரநிலை சூழ்நிலைகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை) வழங்குவதற்கான மசோதாவுக்கு (2016) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

கேரளா

கேரளாவின் மின்னூட்டும் இலக்கு:

 • 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்பு மோட்டார் வாகனங்களையும் முழுவதுமாகத் மின்னூட்டு நிலைக்கு மாற்ற இலக்கு நிர்ணயம் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் 52வது மாவட்டம்

 • அக்டோபர் 1 முதல் மத்திய பிரதேச மாநிலத்தின் 52 வது மாவட்டமாக நிவாரி அமையும்.

புது தில்லி

தேசிய அருங்காட்சியகத்தில் காந்தியின் இதயம்:

 • புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் தேச தலைவர் காந்தியின் 150 பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் காந்தியின் இதயம் துடிப்பது போல டிஜிட்டல் கிட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப்

நெல் வளர்ப்பு கிராமங்களில் 8,000  அதிகாரிகள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

 • பஞ்சாப் அரசு, சந்தைகளில் இருந்து பயிர்களை விரைவாக விற்கவும் மீதியாகும் பயிர்களிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவும்,  நெல் வளர்ப்பு கிராமங்களில் 8,000  அதிகாரிகள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்:

மாசிடோனியாவில் வாக்கெடுப்பு:

 • மாசிடோனியா அதன் பெயரை வடக்கு மாசடோனியா குடியரசு என மாற்றுவது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறது.

உலகின் முதல்ஊக்கமருந்தை எதிர்க்கும் ஸ்வீடன் நாய்

 • ஸ்வீடன் நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பு, நாட்டின் விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க மோலி என்னும் நாய் ஊக்கமருந்தை எதிர்க்கும்  நாய் என  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவியல்

TB பாக்டீரியாவைக் கொல்ல புதிய அணுகுமுறைகளை IISC அணி கண்டுபிடித்துள்ளது

 • முதல் முறையாக ஒரு புரதம் (WhiB4), TBயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் டி.என்.ஏ வை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் கட்டுப்படுத்தும் என பெங்களூரில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் (ஐஐஎஸ்சி) இன் பேராசிரியர் அமித் சிங் தலைமையிலான பல நிறுவன குழு கண்டறிந்துள்ளது.

நியமனம்:

 • அனில் சந்திர புனிதா – ஆந்திர மாநிலத்தின் அடுத்த தலைமை செயலாளர்

பாதுகாப்பு நிகழ்வுகள்:

சீனா மூன்று அதிவேக ஏவுகணைகளை சோதனை செய்தது

 • ஒரே நேரத்தில் மூன்று வகையான அதிவேக விமான ஏவுகணைகளை பரிசோதிக்கும் சாதனையை சீனா பெற்றுள்ளது. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் குறைவான அளவிலான அதிவேகத்தில் பறக்கக்கூடிய ‘பரந்த-வேக வாகனங்கள்’ என்ற மூன்று அளவிலான மாதிரிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஒப்பந்தங்கள் / உடன்படிக்கை:

நீர் நிர்வாகம் மீது கோவா, போர்த்துக்கல் மை ஒப்பந்தம்

 • நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்கான பொதுவான முன்முயற்சிகளை உருவாக்க போர்த்துகீசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் கோவாவின் பொதுப்பணித் துறைக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) கையெழுத்திடப்பட்டது.

விளையாட்டு நிகழ்வுகள்:

வில்வித்தை உலக கோப்பை

 • துருக்கியில் சாம்சனில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது.
 • தீபிகா குமாரி பெண்களுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மா ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அபிஷேக் வர்மா & ஜோதி சுரேகா வென்னெம் கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்றனர்.

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி

 • யுவராஜ் வத்வானி 25வது ஆசிய இளையயோர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்

 • லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

கோல்ஃப் ரைடர் கோப்பை

 • ஐரோப்பா அமெரிக்காவை வீழ்த்தி கோல்ஃப் ரைடர் கோப்பையை மீண்டும் வென்றது.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here