தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!

0
தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!
தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!

தமிழகத்தில் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி திறப்பதற்கான தேதியும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. மேலும் நடப்பு ஆண்டில் நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றதால் மாணவர்களின் சுமையை குறைக்க பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. அதனால் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டது.

TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – PSTM சான்றிதழ் குறித்த விளக்கம்!

இது மாணவர்களுக்கு மனச்சுமையை அதிகப்படுத்தியது. அதனால் இந்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்த கல்வியாண்டில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை மாணவர்கள் இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம். அத்துடன் அடுத்த கல்வியாண்டிற்கான விடுமுறைக்கான நாட்காட்டியும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து 20 ஆசிரியர் சங்கங்களுடன் வருகிற ஜூன் 2ம் தேதி அன்று டிஜிபி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!