TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? முந்தைய ஆண்டு வினா தொகுப்பு!

0
TNPSC குரூப் 4 கணிதம் - வேலை & நேரம் கணக்குகள்.. இது தாம் முக்கியம்!!
TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? முந்தைய ஆண்டு வினா தொகுப்பு!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இதில் குரூப் 1 போட்டி தேர்வானது Prelims , Mains மற்றும் நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்வது முக்கியமானதாகும். மேலும் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது முக்கியம். எனவே தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. DNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?

(A) டெலோமரேஸ்

(B) ஹெலிகேஸ்

(C) பாலிமெரேஸ்

(D) லிகேஸ்

(E) விடை தெரியவில்லை

விடை : (B)

2. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?

(A) கரியமில வாயு

(B) எல்-நினோ

(C) வெப்பமண்டல சூறாவளி

(D) இட்டாய்-இட்டாய்

(E) விடை தெரியவில்லை

விடை : (B)

3. இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?

(A) 82

(B) 78

(C) 75

(D) 70

(E) விடை தெரியவில்லை

விடை : (C)

4. பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது

(A) நிலநடுக்கம்

(B) எரிமலை

(C) வறட்ச்சி

(D) வெள்ளம்

(E) விடை தெரியவில்லை

விடை : (C)

5. இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802-ஆம் ஆண்டு ______ நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது.

(A) டில்லி

(B) கல்கத்தா

(C) பம்பாய்

(D) மதராஸ்

(E) விடை தெரியவில்லை

விடை : (D)

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!