நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!

0
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - ஆய்வு முடிவில் தகவல்!!
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - ஆய்வு முடிவில் தகவல்!!
நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் – ஆய்வு முடிவில் தகவல்!!

நடப்பு கல்வியாண்டில் (2021-22) பல்வேறு நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளிகள் செயல்பாடு:

2019ம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து தொடங்கி பிற உலக நாடுகளுக்கு வேகமாக பரவிய கொரோனா தொற்று காரணமாக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், கல்வித்துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

DRDO செயற்கை நுண்ணறிவு & சைபர் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

நீண்ட நாட்களாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த மாணவர்கள், பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வரத் தொடங்கி உள்ளனர். பல இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆராய்ச்சியாளர்கள் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் கொரோனா சமூக பரவலாக மாறியதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு – பிரதமர் மோடி புகழாரம்!!

காற்றோட்டமான வகுப்பறைகள், அறிகுறியற்ற கொரோனா தொற்றுக்கான பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான மாணவரை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும். இந்த விதிகள் பள்ளிகளில் சரியாக பின்பற்றப்பட்டு வரும் காரணத்தால், நடப்பு கல்வியாண்டில் (2021-22) பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here