பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பில் அதிரடி மாற்றம் – அரசின் உத்தரவு!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
குளிர்காலம் தொடங்கியது முதல் பனிமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்தை அடைந்து வருகின்றனர். சாலைகளில் புகைமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று டெல்லியில் தொடக்கப்பள்ளிகள் அனைத்திற்கும் நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காற்று மாசுபாடு அதிகரிப்பின் காரணமாக தற்போது டெல்லி முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். காற்று மாசு தொடர்பான அரசின் விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில் ஒற்றைப்படை இரட்டைப்பட எண் முறை வரும் நவம்பர் 13ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.