“உஷார் மக்களே”..! SBI-ல் வீட்டு கடன் வாங்க போறிங்களா..?? ” EMI மட்டுமே இவ்வளவு கட்டணுமா”..??
தற்போதைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பல பேருடைய கனவாக உள்ளது. இந்நிலையில், அந்த கனவை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வங்கிகள் வீட்டு கடனை வழங்கி வருகிறது. அந்த வகையில், SBI வங்கியில் வீட்டு கடன் வாங்க நினைப்பவரா நீங்கள்? வாங்கிய கடனுக்கு பொறுத்த வகையில், மாதம் எவ்வளவு EMI கட்டணும் தெரியுமா..? அப்போ, கீழுள்ள விவரங்களை கட்டாயம் படியுங்கள்.
வீட்டு வரி ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..? இதோ உங்களுக்காக..!!
அதாவது, உங்கள் சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் 700-900 குள் இருக்கும் பட்சத்தில், எளிதில் நீங்கள் வங்கி கடன்களை குறைந்த வட்டியில் பெறலாம். இதுவே, சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில் காலதாமதம் ஆகும். மேலும், SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி, உங்கள் சிபில் ஸ்கோர் 800 இருந்தால், 9.15% வட்டியுடன் வீட்டுக் கடனை பெற முடியும். 700-799 வரை இருந்தால் 9.25% வட்டி, 700-749 இருந்தால் 9.35% வட்டி மற்றும் 650-699 வரை இருந்த 9.45% வட்டியுடன் வீட்டு கடனை நீங்கள் பெற முடியும். மேலும், இதன் செயலாக்க கட்டம் 0.35% முதல் 0.50% ஆகும். உதாரணமாக, இப்போது உங்கள் சிபில் ஸ்கோர் 800 இருக்கும் பட்சத்தில், SBI-ல் இருந்து 20 ஆண்டுகள் காலவகாசத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் வீட்டு கடன் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு மாதம் நீங்கள் 40, 923 ரூபாயை EMI ஆக செலுத்த வேண்டும். இந்நிலையில், 20 ஆண்டுகளில் EMI வட்டி மட்டுமே நீங்கள் 53, 21,472 ரூபாயை செலுத்த வேண்டி இருக்கும். மேலும், 20 ஆண்டுகளில் செயலாக்க கட்டணம், வட்டி மற்றும் அசல் சேர்த்து மொத்தம் ரூ.98,21,472-யை திரும்ப வங்கிக்கு நீங்கள் செலுத்த வேண்டும்.
























