
“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கம்”…!! ‘எங்க இருந்து புறப்படுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க மக்களே’…!!
பண்டிகை காலங்களில் பொதுவாக, சென்னையில் இருந்து அதிக பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். மேலும் சிலர் இந்த கூட்ட நெரிசலின் ஆபத்தை உணராமல் ரயில் படிகளில் தொங்கிய வண்ணம் பயணிக்கின்றனர். இந்த ஆபத்தை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அந்தவகையில், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் ‘சதாப்தி சிறப்பு ரயில்’ இயக்கப்படவுள்ளது . இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், “வண்டி எண் 06190 – தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் வண்டி எண் 06191 – திருச்சியில் இருந்து தாம்பரம் வரை சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. இந்த ரயிலானது “தஞ்சாவூர் , பாபநாசம் , கும்பகோணம் , மயிலாடுதுறை , சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு வழியாக செல்லும் என்று அறிவித்துள்ளது. தற்போது இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது ” என்றும் தெரிவித்துள்ளது

























