கண்ணன் குடும்பத்துடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
கண்ணன் குடும்பத்துடன் இணைந்த
கண்ணன் குடும்பத்துடன் இணைந்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கதிர் - வைரலாகும் புகைப்படங்கள்!
கண்ணன் குடும்பத்துடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் – வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் குடும்பத்தினருடன், அதே சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக உள்ள கதைக்களத்தினை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணன் தம்பிகள் பாசத்துடன் இருக்க கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்ததால் அவரை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாக இருக்கின்றனர். இந்நிலையில் 15 ஆண்டுகளாக தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளாத தனம் மற்றும் மூர்த்தி தம்பதிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? கன்னடம் டூ தமிழ் சினிமா பயணம்!

அந்த குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டும் விழா நடைபெற இருக்கிறது. அதில் கண்ணனை அழைக்காமல் இருக்கின்றனர். கண்ணன் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருக்க அவனை யாரும் அழைக்காமல் இருக்கின்றனர். மேலும் கயலுக்கு மீனா செய்ய நினைத்தது அனைத்தையும் லட்சுமி அம்மா செய்யவிடாமல் தடுத்தார். ஆனால் இப்போது தனம் குழந்தைக்கு செய்ய அதை பார்த்து மீனா மற்றும் அவரது அப்பா கோவத்தின் உச்சியில் இருக்கின்றனர்.

பாவனியை அடிக்க வரும் தாமரை, சமாதானப்படுத்தும் போட்டியாளர்கள் – கலவர பூமியாகும் பிக்பாஸ் வீடு!

இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தனது குடும்பத்துடன் இருக்க அவர்களை அதே சீரியலில் கதிர் காதாபாத்திரத்தில் நடித்த குமரன் சந்தித்துள்ளார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சரவண விக்ரமின் அம்மா அப்பா தங்கை என அனைவரும் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!