SAI இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – ரூ.50,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
SAI இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை - ரூ.50,000/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

Young Professional பணிக்கென இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SAI காலிப்பணியிடங்கள்:

SAI நிறுவனத்தில் Young Professional (Accounts / Finance) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Young Professional கல்வித் தகுதி:

Young Professional (Accounts / Finance) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Post Graduate Diploma, CA, ICMA முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகுறீங்களா… உங்களது நினைவாற்றலை சோதித்து பார்க்க வேண்டுமா? இத உங்களுக்கான சான்ஸ்!

Young Professional வயது வரம்பு:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 32 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Young Professional சம்பளம்:

Young Professional (Accounts / Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.50,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

SAI தேர்வு முறை:

இந்த SAI நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

Young Professional (Accounts / Finance) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 28.04.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கான கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!