‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்ததா? ரசிகர்கள் வெளியிட்ட ஆதாரம்!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக வலம் வந்த ஷபானா, ஆர்யனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என்பதற்கு ஆதாரத்துடன் ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஷபானா, ஆர்யன் ஜோடி:
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஷபானா. முஸ்லீம் மதத்தை சேர்ந்த இவருக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கு அவரது குடும்பத்தினரிடம் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷபானா சிறந்த நடிகையாக சின்னத்திரையில் பிரபலமானார். அதன் பின் அவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் ஒன்று வெளியானது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலியின் திருமண வீடியோ காட்சிகள் – இணையத்தில் வைரல்!
ஆனால் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஷபானா பிறந்தநாள் அன்று இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை ஷபானா வெளியிட்டார். கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஷபானா ஆர்யன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. ஷபானாவின் திடீர் திருமணம் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!
ஷபானா மதம் மாறி திருமணம் செய்து கொள்வதால் வீட்டில் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று பல்வேறு புரளிகள் பரவிய வண்ணம் இருந்தது. மேலும் ஷபனாவிற்கு கேரள முறைப்படி இந்து மதத்தை பின்பற்றி தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷபானா திருமணம் முடிந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு அவருடைய ரசிகர்கள் ஷபானாவின் அம்மாவின் சம்மதத்தோடு தான் அவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது என்று ஆதாரத்தை வெளியிட்டு வருகின்றனர். ஷபானாவின் திருமணத்தில் அவரது அம்மா வெள்ளை நிற புடவையில் முன்னாடி நிற்பது போல புகைப்படம் வெளியாகி உள்ளது.