
ரோஹித் சர்மாவை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ஓய்வு.. வெளியான முக்கிய தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் முடிவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை (07-05-2025) அன்று ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரும் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் அப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலின் செயல்திறன் காரணமாக இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் “டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோலி தெரிவித்துள்ளதாகவும், இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் வர இருப்பதால், ஓய்வு குறித்து மறு ஆய்வு செய்ய கோலியிடம் BCCI வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது”.
Join the ExamsDaily Whatsapp Group

























