பொதுஇடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ,5,000 அபராதம் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!

0
பொதுஇடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ,5,000 அபராதம் - சென்னை வாசிகள் கவனத்திற்கு!
பொதுஇடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ,5,000 அபராதம் - சென்னை வாசிகள் கவனத்திற்கு!
பொதுஇடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் ரூ,5,000 அபராதம் – சென்னை வாசிகள் கவனத்திற்கு!

சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு:

சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள அரசிற்கு சொந்தமான கட்டிடங்கள், அலுவலகங்கள், பாலங்கள், அரசு தூண்கள், சுவர்கள் மற்றும் பேருந்து நிறுத்த குடைகள் போன்ற இடங்களில் நோட்டீஸோ அல்லது சுவரொட்டிகளையோ ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா உறுதி – தமிழக அரசு அறிவிப்பு!

தற்போது, நகரத்தில் பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதுதவிர குறைந்த அளவிலான கழிவுகளை சேர்ப்பதற்கு 15 இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில மட்டுமே கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை சேர்க்க வேண்டும். பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.2000/-மும், 1 டன் அளவிற்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.5000/-மும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!